ஜோஸ் ஆலுக்காஸின் ‘சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ’ ; உலகத்தரம் வாய்ந்த வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு தொடக்கம்


தரம், புதுமை மற்றும் நவீன வடிவமைப்பிலான நகைகளுக்கு நாடெங்கிலும் புகழ் பெற்ற ஜோஸ் ஆலுக்காஸ், உலகத்தரம் வாய்ந்த வைர நகைகளுக்கான சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வை 'சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ' என்ற பெயரில் நடத்துகிறது. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அதன் ஷோரூமில் 2026 ஆகஸ்ட் 1 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் ஜோஸ் ஆலுக்காஸின் உலகெங்கிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட இயற்கை வைர நகைகளின் கலெக்‌ஷகள், தனித்துவமான மற்றும் நவீன வடிவமைப்புகளான மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட நெக்லஸ்கள், தனித்துவமான காதணிகள் மற்றும் மணப்பெண்ணுக்கான பிரத்யேக திருமண நகைகள் காட்சிபடுத்தப்படும். வைர நகைகளுக்கு 25 சதவிதம் தள்ளுபடி உள்ளிட்ட சிறப்புச் சலுகைகளை பெறலாம். மேலும், வாங்கும் ஒவ்வொரு கேரட் வைரத்திற்கும் 500 மில்லிகிராம் தங்க நாணயம் இலவச அன்பளிப்பாக வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்க நகைகளைக் கொடுத்து, சர்வதேச ஆய்வக சான்றிதழ் பெற்ற வைர நகைகளாக மாற்றிக் கொள்ளும் வசதியும், சிறப்புச் சலுகைகளும் இந்த கண்காட்சி நடைபெறும் நாட்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ குறித்து ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர் பால் ஆலுக்காஸ் கூறுகையில், "புதுச்சேரியில் எங்களது சிக்னேச்சர் வைர மற்றும் நேர்த்தியான ஆபரண கண்காட்சியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகத்தரம் வாய்ந்த வைரங்கள், சிறந்த கைவினைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத வடிவமைப்புகளின் சங்கமமாகவும், கொண்டாட்டமாகவும் இக்கண்காட்சி இருக்கிறது. நகை கலைத்திறன் மற்றும் துல்லியமான வடிவமைப்பு நுட்பத்தை போற்றுபவர்களுக்காக இந்தப் பிரத்யேகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் ரசனைக்கும் ஏற்ப தாங்கள் விரும்பும் நகைகளை வடிவமைத்து வாங்கிக் கொள்ளலாம். இதில் காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு ஆபரண அணிவரிசையும் புதுமை மீதான எங்கள் ஆர்வத்தையும் நேர்த்தியாக பிரதிபலிக்கிறது. பல தலைமுறைகளாகப் போற்றி கொண்டாடப்படவிருக்கும் அழகான ஆபரணங்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து வாங்க உதவுவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம்," என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form