சுந்தரம் ஃபைனான்ஸ் உடன் கூட்டுறவை மேம்படுத்தும் எச்டிஎஃப்சி லைஃப்

 


இந்தியாவின் முன்னனி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎஃப்சி லைஃப் ஆனது சுந்தரம் பைனான்சுடனான தனது கூட்டுறவை மேம்படுத்தியுள்ளது. இந்த கூட்டுமுயற்சி மூலம் எச்டிஎஃப்சி லைஃப் ஆனது சுந்தரம் பைனான்சின் வர்த்தக வாகனங்கள், கார் மற்றும் டிராக்டர் கடன் வகை வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎஃப்சி லைஃப் குரூப் கிரெடிட் ப்ரொடெக்ட் பிளஸ் காப்பீட்டு திட்டங்களை வழங்கும். 

இந்த கூட்டுமுயற்சியானது தங்கள் கனவுகளை நனவாக்க விரும்புபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான ஒரு படிநிலை. சுந்தரம் பைனான்சின் பரந்துப்பட்ட கிளை நெட்வொர்க்கின் பரவலை பயன்படுத்தி இந்த கூட்டுமுயற்சி ஆனது எச்டிஎஃப்சி லைஃப்-ன் முன்னிருப்பை மேலும் வலுவாக்கும் மற்றும் ஆயுள் காப்பீட்டை பரந்துப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடியதாக அமைக்கும்.

எச்டிஎஃப்சி லைஃப் குரூப் கிரெடிட் ப்ரொடெக்ட் பிளஸ் காப்பீட்டு திட்டம் என்பது கடன் பெறுபவருக்கு நிதிசார் பாதுகாப்பை வழங்கும் ஒரு முக்கியமான தீர்வு. இந்த ப்ராடக்ட் ஆனது கடன் பெறுபவரின் நிதி பொறுப்புகள் அவரது குடும்பத்தின் மீது விழாமல் இருப்பதை உறுதிபடுத்தும். கடன் பெறுபவர் மரணமடைந்தால் மீதமுள்ள கடன் தொகையை காப்பீட்டு நிறுவனமே முழுவதுமாக ஃபைசல் செய்துவிடும் என்பதால் குடும்பத்துக்கு அக்கடனை தீர்க்க வேண்டிய சுமை ஏற்படாது. இந்த ப்ராடக்ட் ஆனது பல்வேறு கடன் வகைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஒருசேர கடன் பெறுபவர்களுக்கும் கடன் கொடுப்பவர்களுக்கும் நெகிழ்தன்மையையும் சௌகரியத்தையும் வழங்குகிறது.

இந்த ஒப்பந்தத்தை பற்றி எச்டிஎஃப்சி லைஃப்-ன் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ விபா படல்கர் கூறுகையில், "நாங்கள் சுந்தரம் பைனான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை பற்றி மிகவும் உவகையடைகிறோம். இந்த கூட்டுமுயற்சி மூலம் சுந்தரம் பைனான்ஸ் ஆனது தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எச்டிஎஃப்சி லைஃப்-ன் ஆயுள் காப்பீட்டு ப்ராடக்ட்டுகள் மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் குரூப் கிரெடிட் ப்ரொடெக்ட் பிளஸ் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை வழங்க இயலும். சுந்தரம் பைனான்சின் வலுவான அடித்தளம் மற்றும் எங்கள் ஆக்கப்புத்தாக்க ப்ராடக்ட்டுகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் கலவையானது நாடு முழுதுமுள்ள தனிநபர்களை நாங்கள் அணுகவும் அவர்களுக்கு ஆயுள் மற்றும் கடன் சுமை பாதுகாப்பு வழங்கிடவும் அவர்களது குடும்பங்களை நிதிசார் வகையில் பாதுகாத்திடவும் எங்களுக்கு ஆற்றலை வழங்கும். நாங்கள் ஆயுள் காப்பீட்டில் எங்கள் பயணத்தை தொடருகையில் '2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு' என்ற குறிக்கோள் எட்டப்படுவதற்கு எங்கள் பங்களிப்பை வழங்கும் உறுதிப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form