ஜீ தமிழின் ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் மதுரையில் நடைபெறுகிறது

 


தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனலில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தி மக்களை கவர்ந்து வருகிறது. அதே போல் பண்டிகை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை மகிழ்விப்பதிலும் தவறுவதில்லை.

அந்த வகையில் வரும் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. இதற்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. இரண்டு தினங்களும் கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கான ஷூட்டிங் வரும் அக்டோபர் 5-ம் தேதி மதுரை கோகலே சாலையில் உள்ள " லட்சுமி சுந்தரம் மஹாலில் " காலை 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பட்டிமன்றத்தை நேரில் காண ஆசைப்படும் மக்களுக்கு சேனல் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனவும் அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5 அன்று சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில்  நடைபெற உள்ள சிறப்பு பட்டிமன்றங்களை நேரில் கண்டு மகிழ தயாராகுங்கள் மதுரை மக்களே.



Post a Comment

Previous Post Next Post

Contact Form