பாரா பேட்மிண்டனில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜெர்லின் அனிகா

 



எச்சிஎல் அறக்கட்டளையின் ஸ்போர்ட்ஸ் ஸ்காலரான ஜெர்லின் அனிகா, பேட்மிண்டனில் தனது சாதனைகளுக்காக அர்ஜுனா விருதைப் பெறும் இந்தியாவின் முதல் பெண் காது கேளாதோர் எனும் மதிப்புமிக்க கெளரவுத்தைப் பெற்றார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து திங்கள் கிழமையன்று இவ்விருதைப் பெற்றார்.18 வயதான ஜெர்லின், 2022-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

இந்த ஆண்டு தாய்லாந்தில் நடந்த ஆசிய பசிபிக் யூத் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய பசிபிக் காது கேளாதோர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்களையும் வென்றார். முன்னதாக, சீனாவில் நடந்த உலக காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2019-இல் ஜெர்லின் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றுள்ளார்.

எச்சிஎல் டெக்-இன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்) பிரிவான எச்சிஎல் அறக்கட்டளை, அதன் ‘ஸ்போர்ட்ஸ் பார் சேன்ஞ்’ முன்முயற்சியின் கீழ் 2019 முதல் ஜெர்லினை ஆதரித்து வருகிறது என எச்சிஎல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form