தெரு நாடகங்கள் (நுக்கட் நாடகாஸ்) மூலம் நுகர்வோர்களிடையே கற்றல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல கட்ட பிரச்சாரமான “மிஷன் ஜிஆர்எஎச்எகியூ“-ஐ அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த பிரச்சாரத்தின் மூலம், அடிப்படையில் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுடன் துடிப்பாக தொடர்பில் இருப்பதை அமேசான் நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் வளர்ந்து வரும் இணையவழித் துறையில் அதிக வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் தேர்வுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. முதல் கட்டமாக, இந்த தெரு நாடகங்கள் 1௦௦க்கும் மேலான பெருநகரங்கள் மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் டெல்லி ஆகியவற்றில் உள்ள நகரங்களில் நடத்தப்படும்.
நாட்டிலுள்ள எந்தவொரு இணையவணிக நிறுவனமும் இதுவரை செய்யாத ஒரு தனித்துவமான முன்முயற்சியாக, நாடகங்கள் இதன் தாக்கத்தை அதிகப்படுத்தவும், அடிப்படையை சென்றடையவும் முடியும் வகையில் நகர மொழிகள் அல்லது பேச்சுவழக்குகளில் நடத்தப்படும் என அமேசான் இந்தியா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags
Business