8 புதிய கிளைகளுடன் தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் கரூர் வைஸ்யா வங்கி


கரூர் வைஸ்யா வங்கி, நான்கு மாநிலங்களில் எட்டு புதிய கிளைகளை தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் தனது கிளைகளின் எண்ணிக்கையை 929 ஆக இவ்வங்கி விரிவுபடுத்தியுள்ளது.  வங்கியின் வணிகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான வளர்ச்சியின் பின்னணியில் வங்கிக் கிளைகளின் இந்த விரிவாக்க நடவடிக்கை அமைந்துள்ளது. 

தனது கிளைகளின் விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகளில் தொடர் முதலீடு ஆகியவற்றின் மூலம், வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துதல், பிராந்திய அளவிலான இருப்பை வலுப்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகர்களின் வளர்ந்து வரும் வங்கி தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் கரூர் வைஸ்யா வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

வங்கியின் எட்டு புதிய கிளைகளில் தமிழ்நாட்டில் மூன்றும், கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் தலா இரண்டும், உத்தரப் பிரதேசத்தில் ஒன்றும் அடங்கும். தமிழ்நாட்டில், சென்னை மாநகரில்-சூளை, திருக்கழுக்குன்றம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டி ஆகிய இடங்களிலும்; கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள நாகரபாவி மற்றும் ஹுலிமாவு ஆகிய இடங்களிலும்; தெலங்கானாவில் பச்சுப்பள்ளி மற்றும் தாண்டூர் ஆகிய இடங்களிலும்; உத்தரப் பிரதேசத்தில் ஆக்ராவிலும் இப்புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 நாட்டின் பல்வேறு பபகுதிகளிலும் உள்ள அனைத்து தரவாடிக்கையாளர்களுக்கும் தனது உயர்தரமான வங்கி மற்றும் நிதி சேவைகளை வழங்குவதில் இவ்வங்கி முனைப்புடன் இருக்கிறது. தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், வையம்பட்டியில் அமைந்துள்ள புதிய கிளையை மணப்பாறை நகராட்சி ஆணையர் எஸ். கணேஷ் திறந்து வைத்தார்.இந்தக் கிளை S F எண். 139/6B, 139/6C, கதவு எண். 1/808/21, ரயில் நிலையச் சாலை, வையம்பட்டி, மணப்பாறை வட்டம், திருச்சிராப்பள்ளி - 621315, தமிழ்நாடு என்ற முகவரியில் அமைந்துள்ளது.

 புதிய கிளைகளின் துவக்கம் குறித்து பேசிய கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரமேஷ் பாபு, “எட்டு புதிய கிளைகளின் தொடக்கமானது, முக்கிய சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகளை எளிதாகக் கொண்டு சேர்ப்பதற்கும், எங்களின் சேவையை விரிவுபடுத்துவதற்கும் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும். பெருநகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், குறிப்பாக சில்லறை வர்த்தகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் விவசாயத்துறை ஆகியவற்றிற்கான வங்கிச் சேவைகளில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். நேரடி கிளைகளின் மீதான எங்களது தொடர்ச்சியான முதலீடு, டிஜிட்டல் வங்கி சேவைகளுடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவையாற்றவும், உறவுகளை ஆழப்படுத்தவும், நிலையான வணிக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் உதவும்” என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form