ஜி ஸ்கொயர் – ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்


இந்தியாவின் மாபெரும் வீட்டுமனை மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் கீழ் இயங்கும் ஜேஎஸ்டபிள்யூ ஒன் பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின்  துணை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 'வீட்டு கட்டுமான தள பங்குதார நிறுவனமாக ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ் செயல்படும். 

இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம், ஜி ஸ்கொயர் குழுமம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் வீட்டுமனை உடைமைக்கும் வீட்டு நிர்மாணத்திற்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதையே தங்களது இலக்காக நிர்ணயித்துள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகள், பட்ஜெட் மற்றும் காலக்கெடுவுக்கு ஏற்ற கட்டுமானத் தீர்வுகளை எளிதில் ஆராய்ந்து தேர்வு செய்ய இது வழிவகுக்கிறது.

வீட்டுமனை வாங்குபவர்களுக்கு செலவு குறித்த தகவல்களை வெளிப்படைத்தன்மையுடனும் தெளிவான விவரங்களுடனும் ஒருங்கிணைந்த வீட்டு கட்டுமான அனுபவத்தை வழங்குவதை இந்தக் கூட்டு முயற்சி உறுதி செய்யும். வீட்டுமனை வாங்கும் வாடிக்கையாளர்களை ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ்-ன் அதிநவீன தொழில்நுட்ப அடிப்படையிலான வீட்டு கட்டுமான தளத்துடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான சிறப்பம்சங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். 

மேலும், தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், கட்டுமானச் செலவுகளைத் திட்டமிடவும் இது உதவுகிறது.ஜே எஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ் வழங்கும் அதிநவீன தொழில்நுட்ப அடிப்படையிலான வீட்டு கட்டுமான தளம், கட்டுமானப் பணிக்கு ஒரு முறையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கொண்டுவருகிறது.

ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜெயம் கூறுகையில், “ஜி ஸ்கொயரில், சொந்த வீட்டுமனை வாங்கி வீடு கட்டுவது செலவு, நில உரிமை மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. ஜேஎஸ்டபிள்யூ ஒன் ஹோம்ஸ் உடனான எங்கள் கூட்டு முயற்சி மூலம், வடிவமைப்பு குறித்த இறுதி முடிவுகளை எடுப்பது, சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெறுவது, வீட்டு கட்டுமானத்திற்கான தளத்தை தயார்நிலையில் வைப்பது மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வீட்டின் கட்டுமானத்தைத் திட்டமிடுவது என அனைத்தையும் எளிதில் மேற்கொள்ளமுடியும். மேலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள பிரிக்கப்படாத நில உரிமைப் பங்கு தொடர்பான சிக்கலின்றி, முழு நிலத்தின் உரிமையையும் வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம், வெளிப்படைத்தன்மையுடன், குறைந்த செலவில் வில்லா கட்டுமான அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்,” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form