ராஜஸ்தானின் ஆர்கே குரூப் நிறுவனமான வொண்டர் ஹோம் ஃபைனான்ஸ் புதுச்சேரியில் தனது 184-வது கிளையைத் திறந்தது


ராஜஸ்தானின் புகழ்பெற்ற ஆர்கே குரூப் நிறுவனத்தின் ஒரு அங்கமான வொண்டர் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் தனது விரிவாக்கப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய முன்னேற்றமாக புதுச்சேரியில் புதிய கிளையைத் திறந்துள்ளது. இந்த புதிய கிளை தொடக்கத்தின் மூலம் புதுச்சேரியில் தனது சேவைகளை முதல் முறையாகத் தொடங்குவதுடன், நாடு முழுவதும் தனது கிளை வலையமைப்பை 184 கிளைகளாக விரிவுபடுத்தியுள்ளது. 

புதிய கிளையை வொண்டர் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ சஞ்சய் சிங் ராஜாவத்  திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வொண்டர் ஹோம் ஃபைனான்ஸ்-ன் மண்டல விற்பனை மேலாளர் டி உமேஷ் குமார், மண்டல கடன் மேலாளர் கேசவா, மண்டல விற்பனை மேலாளர் அசோக்குமார் கலியமூர்த்தி ஆகியோர், நிறுவனத்தின் பிற அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

 புதுச்சேரி கிளை திறப்பு, தென் பிராந்தியத்தில் நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், வளர்ந்து வரும் நகரங்கள், அரைநகர்ப்புற பகுதிகள் மற்றும் போதிய நிதிச் சேவைகள் கிடைக்காத சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வீட்டு நிதி தீர்வுகளை வழங்கும் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சியையும் பிரதிபலிக்கிறது.புதிய புதுச்சேரி கிளை, பிராந்தியத்தில் வொண்டர் ஹோம் ஃபைனான்ஸ்-ன் சேவை அணுகலை மேலும் வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வீட்டு நிதிச் சேவைகளை எளிதாகப் பெறுவதற்கான வசதியையும் ஏற்படுத்தும்.

இந்த நிகழ்வில் வொண்டர் ஹோம் ஃபைனான்ஸ் - மண்டல விற்பனை மேலாளர் அசோக்குமார் கலியமூர்த்தி கூறுகையில்,“புதுச்சேரி எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். இங்கு புதிய கிளையைத் திறந்ததன் மூலம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகவும் திறம்படவும் சேவை வழங்க முடியும். உள்ளூர் வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு எளிமையான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட வீட்டு நிதி தீர்வுகளை வழங்குவதுதான் எங்களின் முக்கிய நோக்கம். எங்களின் அர்ப்பணிப்பான குழு மற்றும் தனிப்பட்ட சேவையின் மூலம், மேலும் பல குடும்பங்கள் தங்களுக்கென ஒரு சொந்த வீட்டை வாங்கும் கனவை நனவாக்க உதவுவதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form