27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்த என்எச்சி ஃபுட்ஸ்


ஏற்றுமதி நிறுவனமும், உணவு பதப்படுத்தும் நிறுவனமுமான என்எச்சி ஃபுட்ஸ் லிமிடெட், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.110.51 கோடியாக இருந்த நிலையில், 234.54 சதவிதம் உயர்ந்து ரூ.369.69 கோடியாகவும், ஈபிஐடிடிஏ 512.43 சதவிதம் அதிகரித்து ரூ.21.29 கோடியாகவும் உயர்ந்துள்ளது. நிகர லாபம் 919.81 சதவிதம் உயர்ந்து ரூ.16.99 கோடியாகவும், அடிப்படை ஈபிஎஸ் ரூ.0.03-லிருந்து ரூ.0.26 ஆகவும் அதிகரித்துள்ளது.

11 எஃப்சிசிபி-களில் மொத்தம் 11 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பகுதி மாற்றத்தின் மூலம் குளோபல் ஃபோக்கஸ் ஃபண்ட் நிறுவனத்திற்கு 10,41,77,040 முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம், நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனம் ரூ.76.19 கோடியாக அதிகரித்துள்ளது. இதனுடன், வேளாண் பொருட்கள் விநியோகம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அக்ரிகனெக்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்து கையகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்து, புரிந்துணர்வு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் வேளாண் பொருட்கள் பிரிவில் நிறுவனத்தின் இருப்பை விரிவுபடுத்தி, வணிகச் செயல்பாடுகளை மேலும் பல்வகைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

என்எச்சி ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்யம் ஷிரிஷ்சந்திர ஜோஷி கூறுகையில், “27ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வருவாய் மற்றும் செயல்பாட்டு லாபத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் வலுவான செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளோம். மேம்பட்ட அளவு மற்றும் சிறப்பான செயல்படுத்தலின் ஆதரவுடன் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்துதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இருப்பை விரிவுபடுத்துதல் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். நிலையான வளர்ச்சியை வழங்குவதற்கும், பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பை உருவாக்குவதற்கும் உறுதிபூண்டுள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form