மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் முற்றிலும் புதிய ப்ளாசோ ஐ-ட்ரக் அறிமுகத்தை அறிவித்துள்ளது. இது 'ப்ராஃபிட் கா ராக்கெட்' என்ற ஒற்றை வாக்குறுதியை மையமாகக் கொண்டு, டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை ஹெவி கமர்ஷியல் டிரக் ஆகும்.மஹிந்திரா ப்ளாசோ ஐ-ட்ரக் வரம்பானது 3 வண்ணங்களில் வருகிறது, மேலும் இது அனைத்து மாடல்கள் மற்றும் பயன்பாடுகளிலும் கிடைக்கும். ப்ளாசோ ஐ-ட்ரக்-ன் வடிவமைப்பானது, தனது ஹெவி கமர்ஷியல் வாகன வரம்பிற்காக மஹிந்திரா உருவாக்கியுள்ள இன்டெலிகோர் வடிவமைப்புத் தத்துவத்தின் முதல் வெளிப்பாடாகும்.
10 சதவிதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் ப்ளாசோ ஐ-ட்ரக், ஏஐ-தொழில்நுட்பத்துடன் கூடிய 'ஐஃப்யல் ஸ்மார்ட் ஆட்டோ டிரைவ் மோட், டர்போ மேக்ஸ் டர்போசார்ஜர், ஆப்டி ஃபூயல் ஏர் கம்ப்ரஸர் மற்றும் பல வன்பொருள் தீர்வுகள் மற்றும் மென்பொருள் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இந்த ஒட்டுமொத்த சேமிப்புகள் ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரக்கிற்கு ₹15 லட்சம்* வரை கூடுதல் லாபத்தை வழங்கக்கூடும், இது வாடிக்கையாளர்கள் தங்களது வணிகத்தை விரைவாக வளர்க்க உதவுகிறது.இதில் 320 எச்பி எம்பவர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் வசதி - கம்ஃபிமேக்ஸ் சஸ்பென்டட் சீட், ஈசிக்ரூஸ்- க்ரூஸ் கண்ட்ரோல், மைக் வசதியுடன் கூடிய ப்ளூடூத் மியூசிக் சிஸ்டம், விசாலமான, பிரீமியம் மற்றும் சௌகரியமான ஏசி கேபின், அகலமான, கம்பீரமான கிரில், உயர் செயல்திறன் கொண்ட முகப்பு விளக்குகள், தனித்துவமான ஸ்கைலைன் ப்ளூ உடல் வண்ணம், ஆகிய அம்சங்களுடன் வருகின்றது.
ப்ளாசோ ஐ-ட்ரக் நிகழ்நேர வாகனத் தகவல்கள், முன்கூட்டியே கோளாறுகளைக் கண்டறியும் வசதி ஓட்டுநரின் நடத்தையைக் கண்காணித்தல், பராமரிப்பு மேலாண்மை மற்றும் பயனுள்ள வணிக நுண்ணறிவுகளை அறியும் 'ஐமேக்ஸ் 2.0' வசதியுடன் வருகிறது. வாடிக்கையாளர்களின் கைகளில் அதிக கட்டுப்பாட்டை வழங்குவதற்காக, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நீண்ட கால எம்கேர் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டங்கள் இப்போது கிடைக்கின்றன. புதிய 'நவ்24x7' மொபைல் செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு பிரேக்டவுன் உதவி கோரிக்கைகளை எழுப்பவும், கண்காணிக்கவும், முடிக்கவும், பிரேக்டவுன் வாகனத்தின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் பார்க்கவும், பழுதுபார்க்கும் ஆர்டர்களுக்கான டிஜிட்டல் ஒப்புதல்களை விரைவாகச் செய்யவும், உதிரிபாகங்களை நேரடியாக ஆர்டர் செய்யவும், முழுமையான சேவை வரலாற்றை ஒரே இடத்தில் அணுகவும், நினைவூட்டல்களுடன் முன்பதிவு செய்து எந்தவொரு பராமரிப்பு நேரத்தையும் தவறவிடாமல் இருக்கவும் உதவுகிறது.
ஒவ்வொரு ப்ளாசோ ஐ-ட்ரக் வாகனமும், மஹிந்திராவின் விரிவான சேவை உத்தரவாதத் திட்டத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, தொழில்துறையிலேயே முதன்முறையாக 48 மணிநேர ஆப்டைம் கேரண்டி வழங்கப்படுகிறது. இதன்படி வாக்குறுதிளிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள்* வாகனம் மீண்டும் இயங்கச் செய்யப்படவில்லை எனில், வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு ₹10,000* வீதம் வழங்கப்படும். மஹிந்திராவின் ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை கேரண்டி இந்த மதிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. உத்தரவாதம் அளிக்கப்பட்ட உதிரிபாகம் வாக்குறுதியளிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் கிடைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர் அந்தந்த உதிரிபாகத்தை இலவசமாகப் பெற உரிமையுடையவர்* ஆவர்.
இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த டிரக்ஸ் அண்ட் பஸ்சஸ் தலைவரும், எஸ்எம்எல் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும் மற்றும் மஹிந்திரா குழுமத்தின் குழு நிர்வாக வாரிய உறுப்பினருமான வினோத் சகாய் கூறுகையில், "மஹிந்திராவில் எங்களது லட்சியம் சிறந்த டிரக்குகளை உருவாக்குவது மட்டுமல்ல, புத்தாக்கம் மற்றும் வலுவான வாடிக்கையாளர் பங்களிப்பின் மூலம் வணிக ரீதியான இயக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதாகும்.ப்ளாசோ ஐ-ட்ரக் ஸ்மார்ட் டிரக்கிங் மூலமாக இந்தத் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது; மேலும் தொழில்துறையிலுள்ள பிற டிரக்குகளுடன் ஒப்பிடும்போது, ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரக்கிற்கு ₹15 லட்சம்* வரை லாபத்தை அதிகரிக்கும் சாத்தியக்கூறுடன் உண்மையிலேயே இது ‘ப்ராஃபிட் கா ராக்கெட்’ ஆகத் திகழ்கிறது. அதே நேரத்தில், இது தொழில்துறையிலேயே முதன்முறையான மற்றும் நிகரற்ற ஆப்டைம் கேரண்டியுடன் வருகிறது." என்றார்.
