இந்தியாவின் மிகவும் நம்பகமான காலணி பிராண்டான பாட்டா இந்தியா நிறுவனம், அதன் 93-வது ஏஜிஎம்-ஐ (வருடாந்திர நிர்வாக பொதுக் கூட்டத்தினை) நிகழ்த்தியது; இதில் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு வலுவான, சுறுசுறுப்பான மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட வணிகத்தை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை பாட்டா இந்நிகழ்வில் மீண்டும் உறுதிப்படுத்தியது. தயாரிப்பில் புதுமை, சிறந்த தொழில்முறை செயல்பாடுகள், டிஜிட்டல் வணிக மேம்பாடு, மற்றும் போர்ட்ஃபோலியோ மாற்றம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான யுக்திகளும் வகுக்கப்பட்டன; இந்தியாவின் வளர்ந்து வரும் காலணி சந்தையில் பாட்டாவின் தலைமையை வலுப்படுத்தும் அதே நேரத்தில் நிலையான, லாபகரமான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அஸ்திவாரத்தை வலுப்படுத்துவதில் அதன் யுக்தி கவனம் செலுத்தியது.
சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக, பாட்டா நிறுவனம் இந்தியாவின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருவதோடு, பல தலைமுறைகளாக நுகர்வோரின் நம்பிக்கையையும் ஈன்றுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய மாற்றம் அந்த நம்பிக்கையை சமகால சூழலுக்கு மிகவும் ஏற்றவாறு முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது; அதாவது காலணிகள் என்பவை சௌகரியம், ஸ்டைல், மதிப்பு மற்றும் வசதியை ஒன்றாக வழங்க வேண்டுமென இன்றைய நுகர்வோர் எதிர்பார்க்கிறார்கள். நுகர்வோர் மீது பாட்டா நிறுவனம் காண்பிக்கும் இந்த கூர்மையான கவனமே - அதன் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ, ரீடெயில் விற்பனை அனுபவம், டிஜிட்டல் டச்பாயிண்ட்கள் மற்றும் ஆப்பரேஷன் மாடல் ஆகியவற்றினை வழிநடத்துகிறது.
இந்த ஆண்டில் அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதிலேயே பாட்டா முக்கிய கவனம் செலுத்தியது; அதாவது நிறுவனம் அதன் செயல்முறைகளை எளிதாக்குவது; திட்டமிடும் திறன்களை மேம்படுத்துவது; மற்றும் உற்பத்தி, மூலப்பொருள் கொள்முதல் மற்றும் விநியோகச் சங்கிலி முழுவதும் அதன் செயலாக்கத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி இந்த மேம்பாட்டினை சாத்தியமாக்கியது. பாட்டா இந்தியா நிறுவனமானது இந்தியாவில் அதன் ஸ்டோர்களில் தயாரிப்புகள் கிடைக்கும் தன்மையை 8% மேம்படுத்தியுள்ளது; அதே நேரத்தில் புதிய தயாரிப்புகளின் இருப்பை 70% என்கிற இடைநிலை வரம்பிலிருந்து சுமார் 90% ஆக அதிகரித்துள்ளது; இதனை சீசனுக்கு ஏற்ப ஸ்டோருக்கு புதிய தயாரிப்புகளை கொண்டுவந்து ரீசெட் செய்வதன் மூலம் சாத்தியமாக்கியுள்ளது.
பாட்டா இந்தியா நிறுவனமானது நவீன ஸ்டைலிங், மேம்பட்ட சௌகரியம் மற்றும் உயர்ந்த மதிப்பு ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தி அதன் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது. ஹஷ் பப்பீஸ், பவர், ஃப்ளோட்ஸ், கம்ஃபிட் மற்றும் பிரதான பாட்டா தயாரிப்புகள் போன்ற பிரிவுகளில் - அதிகரித்து வரும் நுகர்வோரின் ஸ்டைல் விழிப்புணர்வு, சௌகரியமான காலணிகளுக்கான தேடல், மற்றும் டிஜிட்டல் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அதன் சேவைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட மார்கெட்டிங் முன்முயற்சிகள் மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவை காலணிகளின் தயாரிப்பு பரிணாமத்தை - அதிகம் விரும்பப்படும் பிராண்டாக மாற்ற உதவுகின்றன குறிப்பாக இளைய நுகர்வோர் மத்தியில் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்பில் பேசிய பாட்டா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன், அஸ்வனி விண்ட்லாஸ் பேசுகையில், “2025 - 26 நிதியாண்டு பாட்டா இந்தியா நிறுவனத்திற்கு மிகுந்த நோக்கம் நிறைந்த ஒரு மாற்றத்தின் ஆண்டாக அமைந்தது. நாங்கள் போட்டித்தன்மையை வலுப்படுத்துகிறோம், சுறுசுறுப்பான செயல்பாடுகளை மேம்படுத்துகிறோம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு எங்கள் வணிகத்தைத் தயார்படுத்துகிறோம். இந்த மாற்றத்தின் முக்கியப் புள்ளியாக இருப்பது எங்களது புத்தாக்கம் பெற்ற அர்ப்பணிப்பு உணர்வாகும் - அது தலைசிறந்த தயாரிப்பு, நவீன ஸ்டைலிங், மேம்பட்ட சௌகரியம் மற்றும் உயர்ந்த மதிப்பினை வழங்குதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிகள் யாவும் பாட்டா பிராண்ட் மற்றும் அது முன்மொழியும் மதிப்பு மீது தலைமுறைகளைக் கடந்து தொடரும் அதன் நம்பிக்கைக்கு ஒரு புதிய உத்வேகத்தை வழங்கும்,” என்று கூறினார்.
