10,000 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு புதிய மைல்கல்லை எட்டிய நாராயணா ஹெல்த் சிட்டி



பெங்களூருவில் அமைந்துள்ள நாராயணா ஹெல்த் சிட்டி, கடந்த மூன்று ஆண்டுகளில் 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் சிகிச்சை, விபத்து காய சிகிச்சை (Trauma), முதுகுத்தண்டு சிகிச்சை மற்றும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை, தசை-எலும்பு (Musculoskeletal) தொடர்பான பல்வேறு நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம், பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறை மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட சிகிச்சை முறைகள் மூலம் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மருத்துவமனையின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள், அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம், நோயாளிகளுக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட இம்ப்ளாண்ட்கள் மற்றும் முழுமையான மறுவாழ்வு (Rehabilitation) நடைமுறைகளின் ஆதரவுடன், நாராயணா ஹெல்த் சிட்டியின் எலும்பியல் துறை அதிக சிக்கலான நோயாளிகளுக்கும் உயர்ந்த அறுவைச் சிகிச்சை துல்லியத்துடன் சிகிச்சை அளித்து வருகிறது. இதன் மூலம் சிறந்த செயல்திறன் கொண்ட சிகிச்சை முடிவுகள் மற்றும் விரைவான குணமடைதல் உறுதி செய்யப்படுவதோடு, ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த எலும்பியல் சிகிச்சையை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்க வேண்டும் என்ற தனது உறுதிப்பாட்டையும் மருத்துவமனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த மருத்துவ நிபுணத்துவம், சமீபத்தில் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்ட பல்வேறு சிக்கலான மற்றும் உயர் சவால்கள் நிறைந்த அத்தகைய ஒரு சவாலான வழக்கில், முழங்கால் பகுதியில் தொடர்ந்து வலி மற்றும் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி நாராயணா ஹெல்த் சிட்டியில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எலும்புத் தொற்று எனக் கருதி வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட திசுப் பரிசோதனையில் (Tissue Analysis), தீவிர தன்மை கொண்ட எலும்புப் புற்றுநோயான Osteosarcoma இருப்பது உறுதி செய்யப்பட்டது. கீமோதெரபி சிகிச்சையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து, புற்றுநோய்க் கட்டியை முழுமையாக அகற்றுவதோடு, எதிர்காலத்தில் காலின் இயல்பான செயல்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் அந்தச் சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறுமியின் இளம் வயதையும், எதிர்காலத்தில் எலும்பு வளர்ச்சி கணிசமாக இருக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு, வழக்கமாக பயன்படுத்தப்படும் கட்டி மாற்று செயற்கை மூட்டு (Tumour Prosthesis) பொருத்துவது பொருத்தமானதாக இருக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால், காலப்போக்கில் இரு கால்களின் நீளத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த சவாலை சமாளிக்கும் வகையில், நாராயணா ஹெல்த் சிட்டியின் எலும்பியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், ஜெர்மனியில் சிறப்பாக தயாரிக்கப்பட்டு, சிறுமியின் எதிர்கால உடல் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும் தன்மை கொண்ட, அறுவைச் சிகிச்சையின்றி நீளத்தை அதிகரிக்கக்கூடிய (Non-invasive Expandable tumour prosthesis) தனிப்பயனாக்கப்பட்ட கட்டி மாற்று செயற்கை மூட்டை வெற்றிகரமாக பொருத்தினர். அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தச் சிறுமி முழுமையாக நலமுடன் வாழ்ந்து வருவதோடு, அவரது கால் வெற்றிகரமாக பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட காலின் செயல்திறனும், இயல்பான வளர்ச்சியும் சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

நாராயணா ஹெல்த் சிட்டியின் மூத்த ஆலோசகர் - எலும்பியல் துறை, டாக்டர் சுமன் எம். பைரேகவுடா கூறுகையில், "குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்புப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில், புற்றுநோய்க் கட்டியை முழுமையாக அகற்றுவதுடன், எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட உறுப்பின் செயல்திறனையும் இயல்பான வளர்ச்சியையும் பாதுகாப்பது மிக முக்கியமான சவாலாகும். இந்தச் சிறுமியின் வழக்கில், தனிப்பயனாக்கப்பட்ட விரிவடையும் செயற்கை மூட்டு (Expandable Prosthesis) பொருத்தப்பட்டதன் மூலம், அவரது காலை பாதுகாப்பதோடு, அது இயல்பாக வளரவும் வழிவகுத்தோம். சில தசாப்தங்களுக்கு முன்பு, எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு கால் அல்லது கை அகற்றும் (Amputation) அறுவைச் சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. ஆனால் இன்று, கீமோதெரபி, அறுவைச் சிகிச்சை நுட்பங்கள் மற்றும் இம்ப்ளாண்ட் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், சுமார் 60 முதல் 80 சதவீத நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடிகிறது. மேலும், 90 முதல் 95 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு உறுப்பைப் பாதுகாக்கும் (Limb Salvage) அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது. எலும்புப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சரியான நேரத்தில் சிகிச்சையைத் தொடங்குதல் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்கள் இணைந்து வழங்கும் சிகிச்சை அணுகுமுறை ஆகியவையே சிறந்த சிகிச்சை பலனைப் பெறுவதற்கான முக்கிய காரணிகளாகும்," என்றார்.

மற்றொரு சிக்கலான வழக்கில், வீட்டு வேலை செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்த 55 வயதுடைய பெண் ஒருவர், சுமார் 20 ஆண்டுகளாக இரு முழங்கால்களிலும் ஏற்பட்டிருந்த மூட்டுவாத (Bilateral Knee Arthritis) பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு நாராயணா ஹெல்த் சிட்டியை அணுகினார். காலப்போக்கில் முழங்கால் வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்வதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டதுடன், அவரது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உருவானது. இளமைப் பருவத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவரது வலது முழங்காலில் கடுமையான வடிவமாற்றம் (Deformity) ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாக, சிறிய தூரம் கூட நடப்பதும், உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளை மேற்கொள்வதும் மிகவும் கடினமாக இருந்தது. முழுமையான மருத்துவ மற்றும் கதிரியக்க (Radiographic) பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு சிக்கலான ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் முதன்மை முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை (Complex Primary Robotic-Assisted Knee Replacement) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதிநவீன ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் செயற்கை மூட்டுகளை மிகத் துல்லியமாக பொருத்தியதோடு, நோயாளியின் இயல்பான நடமாட்டத்தையும் அன்றாட செயல்பாடுகளையும் பாதித்திருந்த கடுமையான முழங்கால் வடிவமாற்றத்தையும் வெற்றிகரமாகச் சரிசெய்தனர்.

அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அதே நாளிலேயே நோயாளி உதவியுடன் நடக்கத் தொடங்கினார். மேலும், ஆரம்ப கட்டத்திலிருந்தே அவருக்கு பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சை வழங்கப்பட்டது. மூன்று நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், வாக்கர் உதவியுடன் சுயமாக நடப்பதுடன், அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளும் நிலையை அடைந்தார். தொடர்ச்சியான பிசியோதெரபி பயிற்சிகளின் மூலம், அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு ஒரு மாதத்திற்குள் எந்த சிரமமும் இன்றி சுயமாக நடக்கும் திறனை மீண்டும் பெற்றார். தற்போது முழங்கால் வலி முற்றிலும் நீங்கி, வீட்டு வேலைகள் அனைத்தையும் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வதுடன், தனது வாழ்வாதாரத்தைத் தொடர மீண்டும் பணிக்குச் செல்லும் நிலையை எட்டியுள்ளார்.

நாராயணா ஹெல்த் சிட்டியின் எலும்பியல் துறை ஆலோசகர் -டாக்டர் பிரதாப் கூறுகையில், "ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, மிகவும் சிக்கலான முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சைகளைக் கூட மிக உயர்ந்த துல்லியத்துடன் மேற்கொள்ள உதவுகிறது. அதே நேரத்தில், ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மென்மையான திசுக்களை (Soft Tissue) முடிந்தவரை பாதுகாக்கவும் இது வழிவகுக்கிறது.இதன் மூலம் செயற்கை மூட்டுகளை மிகவும் துல்லியமாக பொருத்த முடிவதுடன், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய வலி குறைவது, நோயாளி விரைவாக நடமாடத் தொடங்குவது, மறுவாழ்வு (Rehabilitation) விரைவாக நடைபெறுவது மற்றும் நீண்டகால செயல்திறன் மேம்படுவது போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. பல ஆண்டுகளாக கடுமையான வலி மற்றும் மூட்டு வடிவமாற்றத்தால் அவதிப்பட்டு வந்த நோயாளிகளுக்கு, அவர்களின் இயல்பான நடமாட்டத்தையும் சுயசார்பு வாழ்க்கையையும் மீட்டெடுத்து வழங்குவது, அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது," என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 10,000 எலும்பியல் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நாராயணா ஹெல்த் சிட்டி, மேம்பட்ட எலும்பியல் சிகிச்சைக்கான சிறப்புமிக்க மருத்துவ மையமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தி வருகிறது. மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் சிகிச்சை, விபத்து காய சிகிச்சை (Trauma) மற்றும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், மருத்துவ நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை இணைத்து, நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை பலன்களை வழங்குவதில் மருத்துவமனை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form