இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ரேஞ்ச் ரோவர், டிஃபென்டர் மற்றும் டிஸ்கவரி ஆகிய வாகனங்களை உரிமையாக்குவதை மிகவும் அணுகக்கூடிய, கணிக்கக்கூடிய, சௌகரியமான வழிமுறையாக மாற்ற வேண்டும் என்கிற நோக்கில் - உறுதி செய்யப்பட்ட ஒரு பைபேக் திட்டத்தை வடிவமைத்துள்ளதோடு, மேம்பட்ட நிதி ஆதரவு வசதிகளையும் அறிமுகப்படுத்துவதாக ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை சொந்தமாக வைத்திருக்கும் காலம் முழுவதும் ஒரு நிலையான வாக்குறுதியின் மூலம் பயனடைய உதவுகிறது. இதற்கு தகுதி பெறும் வாடிக்கையாளர்கள் தற்போதைய பிரத்தியேக ஷோரூம் மதிப்பில் 55 சதவீதம் வரை குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட பைபேக் மதிப்பைப் பெறலாம்; அதாவது ஏதுவான வாகன உரிமை காலவரையில் - ஒப்புக்கொள்ளப்பட்ட மைலேஜ் வரம்பிற்குள், மாடல் தகுதி மற்றும் ஏற்கனவே-ஒப்புக்கொள்ளப்பட்ட ரீடெயில் விற்பனையாளரது குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. வாடிக்கையாளர்கள் எதிர்கால அப்கிரேடுகளைத் திட்டமிடவும் இத்திட்டம் அனுமதிக்கிறது. ஜேஎல்ஆர் இந்தியாவின் விரிவான, வாடிக்கையாளருக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையையும் இந்த திட்டம் நிறைவு செய்கிறது.
உறுதியளிக்கப்பட்ட இந்த பைபேக் திட்டமானது சொகுசு வாகனம் வாங்குபவர்களின் மிக முக்கியமான பரிசீலனைகளில் ஒன்றாக விளங்கும் ‘எதிர்காலத்தில் நல்ல வாகன மதிப்பீடு வேண்டும்’ என்கிற எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்கிறது. வாகன உரிமையின் தொடக்கத்தில் உத்திரவாதமாக ஒரு குறைந்தபட்ச வாகன மதிப்பை நிறுவுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் அடுத்த வாகனம் வாங்கும் திட்டம் அல்லது வாகனத்தை அப்கிரேடு செய்ய திட்டமிடும் போது - அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள், மற்றும் சிறந்த முறையில் நிதி சார்ந்த கணிப்பினையும் மேற்கொண்டு பயனடைவார்கள்.
ஜேஎல்ஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜன் அம்பா கூறுகையில், “உத்திரவாதமான இந்த பைபேக் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாகனத்தின் எதிர்கால மதிப்புக்கு உத்தரவாதம் அளித்து அவர்களது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது, இது சொகுசு வாகனத்தை வைத்திருக்கும் உரிமையாளர் அனுபவத்தை மேலும் உறுதியான ஒன்றாக மாற்றுகிறது. கூடுதலாக, பிரத்யேக நிதி ஆதரவு திட்டத்தையும் வழங்குவதால், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நிதிசார் சௌகரியம் மற்றும் உறுதியளிப்பை வழங்குகின்றது. இது போன்ற முன்முயற்சிகள் மூலம், உரிமையாளராக எங்களது வாடிக்கையாளர்களின் பயணம் முழுவதும் அவர்களுக்கு நம்பிக்கையையும் நீண்ட கால நன்மதிப்பையும் வழங்கும் முனைப்பில் உள்ளோம்” என்றார்.