இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் ஹவுசிங், மதுரையின் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள டிவிஎஸ் பெட்ரோல் பங்க் பகுதியில் 'ஜி ஸ்கொயர் டெம்பிள் வியூ ஸ்கொயர்' என்ற தனது பிரத்தியேக ப்ரீமியம் குடியிருப்பு மற்றும் வணிக மனைத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில் 1.63 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புக்கான 69 ப்ரீமியம் வீட்டுமனைகளும், 2 ஏக்கர் பரப்பளவில் 6 ப்ரீமியம் வணிக மனைகளும் அமையவுள்ளன. இதில் வீட்டுமனைகளின் முதல் ஐந்து புக்கிங்குகளுக்குச் சிறப்பு அறிமுக விலையாக ஒரு சதுர அடிக்கு ₹15,990 என்ற விலையில் கிடைக்கும். ப்ரீமியம் வணிக மனைகள் ஒரு சதுர அடிக்கு ₹25,990 என்ற அறிமுக விலையிலும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விஷயம் இதன் வரலாற்றுப் பின்னணியாகும். இந்த நிலம், டிவிஎஸ் குழுமத்தின் தொலைநோக்குச் சிந்தனை கொண்ட நிறுவனரான மறைந்த டி.வி. சுந்தரம் ஐயங்கார் அவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது.
பெரியார் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால், இங்கிருந்து மதுரை சந்திப்பு இரயில் நிலையம், அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில், ஆரப்பாளையம், அண்ணா நகர், கே.கே. நகர், மாட்டுத்தாவணி, அவனியாபுரம், விரகனூர் மற்றும் நகரின் பிற முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களை எவ்விதச் சிரமமுமில்லாமல், தடைகளுமில்லாமல் எளிதாகச் சென்றடைய முடியும்.
இப்பகுதி மிகவும் வலுவான சமூக உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கே.என்.ஓ.பி பள்ளி, கேஎல்என் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தி மதுரை கல்லூரி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும், வடமலையான் மருத்துவமனை, சந்திரா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ மீனாட்சி மருத்துவமனை போன்ற முன்னணி மருத்துவ மனைகளும் இப்பகுதிக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளன.
மிக வேகமாக விரிவடைந்து வரும் உள்கட்டமைப்பு, அதிகரித்துவரும் வணிகச் செயல்பாடுகள் மற்றும் மையப்பகுதிக்களுக்கென தொடர்ந்து இருந்து வரும் நீண்டகாலத் தேவை ஆகியவற்றின் காரணமாக பெரியார் பகுதியில் நிலத்தின் மதிப்பு தொடர்ந்து சீராக உயர்ந்து வருகிறது. இத்திட்டத்தில் தங்களது வீட்டுமனைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஜி ஸ்கொயரின் அதிகாரப்பூர்வ வில்லா கட்டுமானப் பங்காளரான ப்ரிக் அண்ட் போல்ட் நிறுவனம் மூலம் வில்லா கட்டுமானப் பணிகளுக்கு ₹5 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம்.
மேலும், “எங்களைவிட குறைந்த விலையில் மனையைக் காட்டினால் வெறும் ரூ.1-க்கு மனையைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்!. எங்கள் திட்டத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும்” என்ற வெளிப்படையான சவாலை ஜி ஸ்கொயர் அறிவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் மிகக் குறைந்த மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் மனைகளை வழங்குவதில் ஜி ஸ்கொயர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இணையற்ற மதிப்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்த புதிய 'ஜி ஸ்கொயர் டெம்பிள் வியூ ஸ்கொயர்' திட்டத்தின் தொடக்கம் குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பால ராமஜெயம் பேசுகையில், " 'ஜி ஸ்கொயர் டெம்பிள் வியூ ஸ்கொயர்' திட்டம் மூலம், வீடு வாங்குபவர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பிரத்தியேகக் குடியிருப்பு மற்றும் வணிகப் மனைகளுக்கான திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். பெரியார் பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இத்திட்டம் மிகவும் மேம்பட்ட உள்கட்டமைப்பு, மதுரை மாநகரின் இதரப் பகுதிகளுக்கு எளிதில் சென்று வர உதவும் போக்குவரத்து வசதி மற்றும் வலுவான முதலீட்டுச் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது” என்றார்.