டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் முதலீட்டாளர்களுக்கு உதவும் மல்டிஃபாக்டர் இன்டெக்ஸ் ஃபண்டை அறிமுகப்படுத்தியது

சந்தைகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்களின் நீண்டகால நிதி இலக்குகளில் உறுதியாக நிலைத்திருப்பது சவாலாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ், பங்கு சந்தை வளர்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புடன் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பையும் வழங்கும் யூனிட் - லிங்க்டு தீர்வான டாடா ஏஐஏ மல்டிஃபாக்டர் இன்டெக்ஸ் ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிதி, நிஃப்டி 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் இருந்து குறைந்த ஏற்றத் தாழ்வு, தரம், மதிப்பு  மற்றும் வேகம்  ஆகிய நான்கு முக்கிய காரணிகளின் ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டு 50 நிறுவனங்களைத் தேர்வு செய்கிறது. குறிப்பாக, குறைந்த ஏற்றத் தாழ்வு அம்சத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வரலாற்று ரீதியாக நிலையான விலை நகர்வுகளைக் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் பங்கு சந்தை வளர்ச்சியில் பங்கேற்கும் அதே நேரத்தில், மேலும் நிலையான மற்றும் உறுதியான முதலீட்டு பயணத்தை மேற்கொள்ள உதவுகிறது.

நுகர்வு, உற்பத்தித் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் விரிவாக்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், இந்தியா தொடர்ந்து வலுவான நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், சந்தைகள் எப்போதும் நேர்கோட்டில் நகர்வதில்லை. ஒரே கருப்பொருள் அல்லது ஒரே முதலீட்டு பாணியை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை, அபாயத்தை ஒரே இடத்தில் குவித்து, குறிப்பிட்ட சந்தை சரிவுகளின் தாக்கத்திற்கு முதலீட்டாளர்களை அதிகமாக உட்படுத்தக்கூடும். இந்த சவாலுக்கு தீர்வாக, டாடா ஏஐஏ மல்டிஃபாக்டர் இன்டெக்ஸ் ஃபண்ட், பல்வேறு வருவாய் இயக்கிகளைஒருங்கிணைக்கிறது. இதில் இடம்பெறும் குறைந்த ஏற்றத் தாழ்வு  அம்சம், திடீர் விலை மாற்றங்களின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. அதேவேளையில், தரம், மதிப்பு  மற்றும் வேகம்  ஆகிய காரணிகள் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரித்து, முதலீட்டாளர்களுக்கு மேலும் சமநிலையான மற்றும் நிலையான முதலீட்டு அனுபவத்தை வழங்குகின்றன.

டாடா ஏஐஏவின் யூலிப் தீர்வுகள் மூலம் கிடைக்கும் இந்த நிதி, வாடிக்கையாளர்கள் சந்தை சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளையும் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பையும் ஒருங்கிணைக்க உதவுகிறது. செயலற்ற  மற்றும் அளவியல்  அடிப்படையிலான முதலீட்டு கட்டமைப்பை பயன்படுத்தி, நீண்டகால செல்வ உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு இந்த உத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. விதிமுறை அடிப்படையிலான  அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம், தனிப்பட்ட பங்கு தேர்வுகளின் மீதான சார்பை இந்த நிதி குறைக்கிறது. மேலும், போர்ட்ஃபோலியோ உருவாக்கம் மற்றும் காலமுறை மறுசீரமைப்பு செயல்முறைகளில் தொடர்ச்சியான ஒழுங்கையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது.

இந்த புதிய நிதி வெளியீட்டின் காலம் 2026 ஜூன் 23 முதல் ஜூன் 30 வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் பெறப்படும் அனைத்து பாலிசிகளும், 2026 ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஒரு யூனிட்டிற்கு நிகர சொத்து மதிப்பில் ₹10 வழங்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form