2030க்குள் இந்தியாவில் 48 பில்லியன் டாலர் முதலீடு: அமேசான் அறிவிப்பு



அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆன்டி ஜெஸி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்தார். இந்தியாவுக்கான அமேசானின் நீண்டகால உறுதிப்பாட்டை ஆன்டி ஜெஸி மீண்டும் வலியுறித்தினார் மற்றும்  2030-க்குள் நாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த கூடுதலாக 13 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார்.

 இதனையடுத்து 2026 மற்றும் 2030-க்கு இடைப்பட்ட காலத்தில் ஏஐ மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், ஆதரிப்பதற்கும் அமேசான் நிறுவனம் மொத்தமாக திட்டமிட்டிருந்த முதலீட்டு 21 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஏஐ மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு முதலீட்டாளர்களில் ஒன்றாக அமேசான் தன்னை நிலைநிறுத்துகிறது.

இந்த முதலீட்டின் மூலம் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஏடபிள்யுஎஸ்  தரவு மைய  (டேட்டா சென்டர்) திறனை விரிவுபடுத்தும்; அதனால் ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு பிரத்தியேகப்படுத்திய ஏஐ சிப்கள், நிர்வகிக்கப்பட்ட ஏஐ சேவைகள், பாதுகாப்பான மற்றும் நம்பகமான கிளவுட் தொழில்நுட்பங்கள் மற்றும் டெவலப்பர் டூல்ஸ் ஆகியவற்றிற்கான அணுகல் கிடைக்கும். 2010 முதல் 2030 வரை இந்தியாவில் அமேசான் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 88 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து வருகிறது. அமேசான் அதன் இணையவழி மற்றும் துரித வர்த்தக (குயிக் காமர்ஸ்) வணிகத்தை சிறப்பாக கையாள அதன்  ஆப்பரேஷன்ஸ் நெட்வொர்க்கில் தொடர்ந்து முதலீடு செய்யவுள்ளது.  அந்நிறுவனம் இந்த ஆண்டு 20-க்கும் மேற்பட்ட புதிய ஃபுல்பில்மென்ட் மையங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட புதிய லாஸ்ட் மைல் டெலிவரி நிலையங்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது; இதனால் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் நம்பகமான டெலிவரி சேவைகளை வழங்கவுள்ளது.  குறிப்பாக 3-ஆம் மற்றும் 4-ஆம் நிலை நகரங்களில், சில நிமிடங்களில், சில மணிநேரங்களில் மற்றும் அடுத்த நாளில் டெலிவரி வழங்க அதிக வேகம் மற்றும் மிகப்பெரிய அளவிலும் விரிவான சேவைகளை வழங்கவுள்ளது. அமேசான் அதன் இணையவழி மற்றும் துரித வர்த்தக (குயிக் காமர்ஸ்) நெட்வொர்க்கை வழிநடத்தும் பல்லாயிரக்கணக்கான டெலிவரி அசோசியேட்களின் நலனை மையமாகக் கொண்டு ‘சம்மான்’ என்கிற  ஒரு பிரத்யேக திட்டத்தையும் அறிவித்துள்ளது.

ஜெஸி, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு நன்றி தெரிவித்தார்; மேலும், இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார், அதில் குறிப்பாக அமேசான் இணையவழி, செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல வணிகங்களை இயக்குவது குறித்தும் பெருமிதம் தெரிவித்தார். அமேசான் நிறுவனத்தின் இந்திய வணிகம் வலுவான வாடிக்கையாளர் தேவையுடன் சிறந்த வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து, அமேசான் 12 மில்லியன் சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது, ஒட்டுமொத்த இணையவழி வணிக ஏற்றுமதியில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமானவற்றை சாத்தியமாக்கியுள்ளது, மற்றும் 2.8 மில்லியன் பணிகளுக்கு ஆதரிவளித்துள்ளது. அமேசான் 10 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு கிளவுட் திறன்களில் பயிற்சி அளித்துள்ளது. 2030-ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவில்  தனது வணிகங்களை விரிவுபடுத்தவும் ஆதரிக்கவும் மொத்தம் 48 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யவும் அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு ஏற்ப, அமேசான் செயற்கை நுண்ணறிவை முன்னிலைப்படுத்தி டிஜிட்டல் மயமாக்கல், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தவுள்ளது. இந்நிறுவனம் 3.8 மில்லியன் வேலைவாய்புகள், ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 80 பில்லியன் டாலர் பங்களிப்பு, 15 மில்லியன் சிறு வணிகங்களுக்கு ஏஐ மூலமாக நன்மைகள் மற்றும் 4 மில்லியன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வியை கொண்டு செல்வதற்கும் உறுதியளித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆன்டி ஜெஸி, கூறுகையில், “நாங்கள் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தோம்; அன்று முதல் இன்று வரை எங்களது பல்வேறு வணிகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறோம். எங்களுக்கான ஆதரவு மிக பெரிய அளவில் உள்ளது, குறிப்பாக எங்களது இணையவழி, ஏஐ மற்றும் கிளவுட் வணிகங்கள் யாவும் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்தியாவில் அமேசானை நாங்கள் மேம்படுத்தும் அதே நேரத்தில், எங்கள் வணிகத்தில் நாங்கள் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள் யாவும் இந்தியா முன்னுரிமை அளிக்கும் இலக்குகளுடன் பொருந்துவதை நாங்கள் உறுதி செய்கிறோம்; குறிப்பாக செயற்கை நுண்ணறிவுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்துதல், சிறு வணிகங்களை டிஜிட்டல் மயமாக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட நாடு முன்னுரிமை அளிக்கும் முன்முயற்சிகளில் நாங்களும் கவனம் செலுத்துகிறோம்.  இந்தியாவில்  எங்கள் அனைத்து வணிகங்களிடம் உள்ள வலுவான தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், நாட்டின் முன்னுரிமைகளை எட்டுவதில் இந்தியாவிற்கு உதவுவதற்காகவும் எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் 48 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யவுள்ளோம். பிரதமர் மோடியின் ‘வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம்; மேலும், இந்தியாவின் வெற்றிகரமான வளர்ச்சிக் கதையில் நீண்டகால பங்குதாரராக இருக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form