தனிஷ்க் தென்னிந்தியாவின் விளம்பரத் தூதராக நடிகை ருக்மிணி வசந்த் அறிமுகம்

மங்களகரமான அட்சய திருதியை பண்டிகையை முன்னிட்டு, டாடா குழுமத்தின் முன்னணி நகை பிராண்டான தனிஷ்க் இயற்கை நவரத்தினங்கள் பிரிவில் தனது புதிய நகைத்தொகுப்புகளை தென்னிந்தியப் பெண்ணின் அடையாளமாக இருக்கும் அதன் புதிய பிராண்ட் அம்பாசிடர் ருக்மிணி வசந்த் முன்னிலையில் அறிமுகம் செய்துள்ளது. 

மனதை மயக்கும் அழகியல் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தி, கைவினைத்திறன் ஆகியவை ஒன்றாக சங்கமிக்கும் 'ஹியூஸ்' நகைத்தொகுப்பின் ஆத்மார்த்தமான உணர்வை ருக்மிணி வசந்த் தனது ஆளுமைமிகுந்த தோற்றத்தினால் பிரதிபலிப்பது ஒரு தனித்துவமான ஒற்றுமையாகும். இந்த அட்சய திருதியை நாளில் தங்கத்தை அணுகும் முறையை 'ஹியூஸ்' நகைத்தொகுப்பு முற்றிலுமாக மறுவரையறை செய்யும் வகையில் மாற்றியிருக்கிறது.

புதிய 'ஹியூஸ்' நகைத்தொகுப்பு, தங்கத்தில் இன்றைய நவீன காலத்தின் வண்ணக் கதைகளைக் கொண்டாடும் தனித்துவமான வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரூ.35,000 முதல் தொடங்கும் இந்த நகைகள், எளிதில் வாங்க முடிகிற மலிவான விலையில் கிடைக்கிறது. நகையின் செய் கூலியில் 20%* வரை தள்ளுபடி மற்றும் தங்க நகை வாங்கும் போது ஒரு கிராமுக்கு ரூ.201 தள்ளுபடி* வழங்கப்படுகிறது. இதில் உள்ள செதுக்கப்பட்ட வடிவங்கள், ஒளிரும் ரத்தினங்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் ஒவ்வொரு வண்ணத்தின் அழகியலை வெளிப்படுத்துகின்றன. மென்மையாக நுணுக்கமாக வெட்டப்பட்ட 'கேபோச்சன்-கட்' கற்களின் பயன்பாடு நகைகளுக்கு அழகியலுடன் செதுக்கப்பட்ட பொலிவைத் தருகிறது. அதேசமயம் வண்ணங்களின் அடுக்குகள் மற்றும் 'பஞ்சிங்', 'ஸ்லைசிங்' போன்ற நுட்பங்கள் நகைகளுக்கு ஒரு தனித்துவமான நவீனத் தன்மையையும் அசைந்தாடும் நளினத்தையும் வழங்குகின்றன. 

மரகதம், அமிதிஸ்ட், சிட்ரின், டூர்மலைன் மற்றும் டான்சனைட் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை நவரத்தினங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இதில் விசேஷத் தருணங்களுக்கான கழுத்தணிகள் மற்றும் வளையல்கள் முதல், அன்றாட நேர்த்திக்காக வடிவமைக்கப்பட்ட லேசான தோடுகள், மோதிரங்கள் மற்றும் பதக்கங்கள் வரை பல வகைகள் உள்ளன.

புதிய நகைத்தொகுப்பு குறித்து டைட்டன் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி பெல்கி ஷெரிங் கூறுகையில், “நகைகள் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தின் வெளிப்பாடாக மாறிவரும் வேளையில், வண்ணங்கள் நிறைந்த நவரத்தினங்கள் அதற்குச் சிறந்த ஊடகமாக அமைகின்றன. இந்தியக் கோடை காலத்தின் துடிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த நகைகள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளன. ருக்மிணி இதன் ஆத்மார்த்தமான உணர்வை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்," என்றார்.

டைட்டன் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி கரிமா மகேஸ்வரி கூறுகையில், "ஹியூஸ் நகைத் தொகுப்பின் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய வண்ணங்கள் நிறைந்த நவரத்தின கற்களிலான வடிவமைப்புகளை உருவாக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். இந்தியக் கோடையில் காணப்படும் பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் துடிப்பான வண்ணங்களை இந்த நகைகளில் கொண்டு வந்துள்ளோம். இது கற்களின் இயற்கையான அழகையும் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மென்மையான, சிற்பம் போன்ற அழகை அளிக்கிறது. இதன் விளைவாக, நவீன இந்திய வடிவமைப்பு குறித்த வலுவான கண்ணோட்டத்துடன் சமகாலத்திய ஒரு தொகுப்பாக ’ஹியூஸ்’ உருவாகியுள்ளது." என்றார்.

தனிஷ்க் உடனான தனது நெருங்கிய உறவு குறித்து ருக்மிணி வசந்த் கூறுகையில், "தனிஷ்க் 'ஹியூஸ்' பிரச்சாரத்தின் முகமாக அவர்களுடன் இணைவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அழகின் பல்வேறு வெளிப்பாடுகளை இவ்வளவு இயல்பாக ஒன்றிணைக்கும் ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு கௌரவம்.” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form