ராயல் என்ஃபீல்டு ஹெரிடேஜ் கலெக்ஷன் அறிமுகம்



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் ஹெரிடேஜ் கலெக்ஷனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது; இது RE பிராண்டின் 125 ஆண்டு வரலாற்றை இன்றைய நவீன அலமாரிக்கு ஏதுவான பிரீமியம் லைஃப் ஸ்டைல் ஆடை ரகங்களை உள்ளடக்கிய ஒரு கலெக்ஷனாகும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மோட்டார் பைக் ஓட்டும் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு, இந்த கலெக்ஷனில் பழமையான லோகோக்கள், கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகள் மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த வடிவமைப்புகளை ஒருங்கிணைத்து நீடித்து உழைக்கும் மற்றும் பொருத்தமான ஆடைகளை உருவாக்கியுள்ளனர்.

பலமான வரலாற்று பாரம்பரியத்துடன் நகரத்திற்காக உருவாக்கப்பட்ட, இந்த ஹெரிடேஜ் கலெக்ஷன்  ராயல் என்ஃபீல்டின் தத்துவமான - கைவினைத்திறன், பயன்பாடு மற்றும் சீரான வடிவமைப்பு ஆகியவற்றினைப் பிரதிபலிக்கிறது. காட்டன் ட்வில்கள், கேன்வாஸ் பிளன்ட்ஸ் மற்றும் ஸ்ட்ரெட்ச் ஆகக்கூடிய துணிகளால் உருவாக்கப்பட்ட இந்த கலெக்ஷன் ஆடைகளின் ஆயுள், அமைப்பு மற்றும் அணிபவரின் அசைவுகளுக்கு ஏதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது பிராண்டின் எதார்த்தமான  நெறிமுறைகளுக்கு உண்மையாக இருக்கும் அதேவேளையில், ஆடைகள் நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்றவாறு இருப்பதையும் உறுதி செய்கின்றன. 

இந்த கலெக்ஷன்களில் தளர்வான ரிலாக்ஸ் ஃபிட்டிங் முதல் மிகவும் கச்சிதமான ஃபிட்டிங் என  பார்வைக்கு ஏதுவான விகிதத்துடன் அணிபவரின் சுதந்திரமான அசைவுகளை வழங்குகிறது. மேலும்,  இயந்திர உலகில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைப்பிடித்த துல்லியத்தை அன்றாட ஆடைகளிலும் புகுத்தியுள்ளது.

இயல்பான முறையில் இயற்கையான வண்ணங்களுடன் சேர்த்து அதன் கலெக்ஷன் முழுவதும் வரலாற்று சிறப்பு மிக்க லோகோக்களை நுட்பமாக கொண்டுவந்துள்ளனர். 1910-ஆம் ஆண்டின் பீரங்கி லோகோ, 1893-ஆம் ஆண்டின் “மேட் லைக் எ கன்” வாக்கியம், மற்றும் 1969-ஆம் ஆண்டின் சீரிஸ் II இன்டர்செப்டர் டேங்க் பேட்ஜ் ஆகியவை ஆடைகளில் நெய்யப்பட்டு, முகடான பதிப்புகளாக அல்லது அச்சுகளாக ஆடைகளில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளன; இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இயந்திர கண்டுபிடிப்பு மற்றும் மோட்டார் பைக் பாரம்பரியத்துடனான ஒரு உறுதியான பிணைப்பை வழங்குகிறது. இந்த வேலைப்பாடுகள் யாவும் நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் அழகியலை கடைபிடிக்கும் அதே நேரத்தில் வரலாற்று பின்னணியையும் ஆடைகளில் சிறப்பாக வழங்கியுள்ளன.

ராயல் என்ஃபீல்டின் தலைமை கமர்ஷியல் அலுவலரான யாத்விந்தர் சிங் குலேரியா அவர்கள் கூறுகையில், “இந்த முன்னெடுப்பானது நூற்றாண்டுக்கும் மேலான ராயல் என்ஃபீல்டின் பாரம்பரியத்தை ஆடைகள் மூலம் வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு அம்சமும் அதாவது - துணிகளை தேர்வு செய்வது மற்றும் ஆடை வடிவமைப்பில் துவங்கி பாரம்பரிய லோகோக்களின் ஒருங்கிணைப்பு என பிராண்டின் வடிவமைப்பிற்கு நேரடியாக உத்வேகம் அளித்துள்ளோம்; துல்லியம், உறுதி மற்றும் சிந்தனைமிக்க கைவினைத்திறனில் பல்லாண்டு பாரம்பரிய மரபினைக் கொண்ட எங்கள் பிராண்டுக்கான ஒரு முழக்க கீதமாக இதனைக் கருதுகிறோம். இந்த ஆடைகள் கடந்த காலத்தின் எதிரொலி மட்டுமல்ல; அவை ஆக்டிவான, அசல் மற்றும் சமகால பிரதிபலிப்பாகவும் ராயல் என்ஃபீல்டின் பாரம்பரிய மரபினை மக்களை சரியாக பெறுவதற்கும் உதவுகின்றன. ரைடர்கள் மற்றும் ஸ்டைல் பிரியர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கலெக்ஷன் கைவினைத்திறனை தெளிவான நோக்கத்துடன் இணைக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புகளை மதிக்குபவர்களுக்காக இந்த கலெக்ஷன் பாரம்பரிய வாகன பிராண்டின் கதையை பிரத்தியேகமாக தொகுத்துக் கூறுகிறது.” என்று தெரிவித்தார்.

இந்த ஹெரிடேஜ் கலெக்ஷன் இப்போது இந்தியாவில் உள்ள ராயல் என்ஃபீல்டின் அனைத்து டீலர்ஷிப்களிலும், அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் (<https://store.royalenfield.com/>/) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இ-காமர்ஸ் தளங்களிலும் பெறலாம்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form