பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் புகழ்பெற்ற 5050 பிராண்ட், அதற்கே உரிய இரட்டை சுவைகளுக்காக பெயர் பெற்றது; கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் சிற்றுண்டி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக 5050 இருந்துவருகிறது என்றால் அது மிகையாகாது. இந்த மைல்கல் சாதனையைக் குறிக்கும் வகையில், பிரிட்டானியா நிறுவனம் பிரிட்டானியா 5050 சீஸ் டிப்ட் மற்றும் கேரமல் டிப்ட் க்ரஞ்சி லேயர்டு சாண்ட்விச்களை அறிமுகப்படுத்துகிறது; இந்த புதிய வகைகள் 5050 பிராண்டின் மைய சிந்தனையான இரட்டிப்பு சுவை என்பதில் புதுமையைக் கொண்டுவந்துள்ளன.
இந்த சீஸ் மற்றும் கேரமல் டிப்ட் க்ரஞ்சி லேயர் சாண்ட்விச்கள் 5050 பிராண்டிற்கே உரிய பிரத்தியேக சிந்தனையை ஒரு புதிய வடிவத்தில் முன்னெடுத்துச் செல்கின்றன. பேக் செய்யப்பட்ட 22 அடுக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய 5050 ரகத்தில் சீரான மொறுமொறுப்பும்; நாவில் உருகும் சீஸ் மற்றும் கேரமலும் சேர்க்கப்பட்டுள்ளன; இத்தயாரிப்பு இரு மாறுபட்ட உணர்வை அதன் வடிவமைப்பின் மூலம் சிறப்பாக வழங்குகிறது. அதாவது மொறுமொறுப்பு மற்றும் மிருதுவாக உருகும் சுவை என இரண்டையும் ஒரே கடியில் நமக்குத் தருகிறது. இதனால் இது ஒரு முழுமையான மற்றும் திருப்திகரமான சிற்றுண்டியாக இருக்கும்.
50-50 பிராண்டு நீண்டகாலமாக கவனம் செலுத்தி வரும் அதன் தனித்துவமான இரட்டை அடையாளத்தையும், தற்போதைய நுகர்வோரின் மாறிவரும் விருப்பங்களையும் ஒருங்கிணைத்து இந்த புதிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக, இந்த பிராண்ட் புதுமையான சுவையில் துவங்கி, அதன் வடிவத்தை விரிவாக்கம் செய்வது என பெரிதளவில் வளர்ச்சி கண்டுள்ளது; அதனால் சிற்றுண்டி தயாரிப்புகளுக்கான பிரிவில் அதன் இருப்பையும் வலுப்படுத்தியுள்ளது. ‘சீஸ் டிப்ட்’ அதன் பயணத்தின் அடுத்த கட்டத்தை பிரதிபலிக்கிறது, அனைவராலும் அணுகக்கூடியதாக இருக்கும் அதேவேளையில் அன்றாட சிற்றுண்டி (ஸ்நாக்ஸ்) என்ற பிரிவில் மிகவும் பிரீமியமான ஒரு தயாரிப்பாக கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரிட்டானியா நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின், வைஸ்-பிரசிடென்ட் சித்தார்த் குப்தா கூறுகையில், “இன்று இந்தியர்கள் எவ்வாறு சிற்றுண்டிகளை சாப்பிடுகிறார்கள் என்பதை கவனிக்கும் போது, நுகர்வோர் தங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை ருசித்து மகிழ மிகவும் புதுமையான மற்றும் சுவாரஸ்யமான வழிகளைத் தேடுகிறார்கள் என்பது தெளிவாகிறது. கேரமல் மற்றும் சீஸ் டிப்ட் லேயர் சாண்ட்விச்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாங்கள் 50-50 என்கிற பிராண்டின் சிந்தனையை சுவைக்கு அப்பால் எடுத்து செல்கிறோம்; அதன் தோற்ற அமைப்பின் மூலம் புதிய சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளோம், மேலும் பிரீமியம் வடிவத்தில் மொறுமொறுப்பு மற்றும் நாவில் உருகும் சுவை என இரண்டையும் ஒன்றாக கொண்டு வந்துள்ளோம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வித்தியாசத்தை கொண்டாடும் பிராண்டான 5050-ஐ தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். இந்த புதிய வெளியீடு சிற்றுண்டி (ஸ்நாக்ஸ்) பிரிவில் எங்கள் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது; அதே நேரத்தில் நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை புதுப்பிப்பதிலும் நாங்கள் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதையும் இந்த புதிய தயாரிப்பு பிரதிபலிக்கிறது, என்றார்.
கிரிக்கெட்டுடனான 5050 பிராண்டின் நீண்டகால பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாகவும், 5050-யின் இரட்டைத்தன்மைக்கு உயிரோட்டம் அளிக்கும் விதவாகவும் - ரிஷப் பந்த் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரைக் கொண்ட ஒரு புதிய தொலைக்காட்சி விளம்பரத்தையும் பிரிட்டானியா வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் ஒரு வேடிக்கையான "க்ரஞ்ச் வெர்சஸ் மெல்ட்" அதாவது, மொறுமொறுப்புக்கும் நாவில் உருகும் சுவைக்கும் இடையிலான விவாதத்தை முன்வைக்கிறது; இரு கிரிக்கெட் வீரர்களும் வெவ்வேறு வகையான சிற்றுண்டிகளை விரும்புபவர்களாக காண்பிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விளையாட்டான மோதல் இருவருக்கும் உள்ள வேறுபாட்டைக் வெளிகாட்டுகிறது; பின்னர் ஒருவழியாக புதிய 5050-ஐ ஒரு கடி சுவைத்ததும் அவர்களின் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இனிமையான பழைய சிந்தனைகளை தூண்டும் இந்த விளம்பரத்தில், நீண்டகால ரசிகர்கள் மற்றும் புதிய தலைமுறை சிற்றுண்டி பிரியர்கள் என இருதரப்பினருக்கும் பிடிக்கும் விதமாக, "நா ரே நா நா" என்கிற பாடலின் ஜிங்கிள் மீண்டும் புதிய வடிவில் ஒலிக்கிறது.
பிரிட்டானியா 5050 சீஸ் டிப்ட் மற்றும் கேரமல் டிப்ட் க்ரஞ்சி லேயர் சாண்ட்விச்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள முன்னணி சில்லறை விற்பனை (ரீடெயில்) கடைகள் மற்றும் க்யூ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கின்றன.
