நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மையத்தில் ஐவிஎஃப் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த மதுரைத் தம்பதியினர்

 


திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன மதுரையைச் சேர்ந்த சூர்யா (38) மற்றும் அஞ்சலி (36)  தம்பதியினர், நான்கு ஆண்டுகளாகக் கருத்தரிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. திருமணத்திற்கு முன்பு, அந்தப் பெண் குடல்வால் மற்றும் சினைப்பை நீர்க்கட்டி தொடர்பான அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டிருந்தார். இதற்கு முன்பு, துரதிர்ஷ்டவசமாக இந்தத் தம்பதியினர் இரண்டு முறை கருச்சிதைவையும், ஐயுஐ சிகிச்சையில் ஐந்து முறை தோல்வியையும் சந்தித்திருந்தனர். 

அந்தத் தம்பதியினர் மதுரையில் உள்ள நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மையத்திற்குச் சென்றனர், அங்கு ஒரு விரிவான பரிசோதனை செய்யப்பட்டது. அந்த ஸ்கேன் பரிசோதனையில், பெண்ணுக்குப் வீக்கமான கருப்பை, கர்ப்பப்பையில் ஏற்படும் கிருமிதொற்று, மற்றும் சினைப்பை நீர்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. கணவரின் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருந்தன.

தம்பதியினருக்கு, தங்களுடைய சொந்த கருமுட்டை மற்றும் விந்தணுக்களைப் பயன்படுத்தி ஐவிஎஃப்-ஐசிஎஸ்ஐ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. உறைந்த கரு பரிமாற்றம் செய்யப்பட்டது, ஆனால் முதல் முயற்சி வெற்றி பெறவில்லை. அதே சிகிச்சையை மீண்டும் செய்வதற்குப் பதிலாக, மதுரையில் உள்ள நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மையத்தின் கருத்தரிப்பு நிபுணர்கள், இந்த முறை சிகிச்சை முறையை மாற்ற முடிவு செய்தனர். 

நோயாளிக்கு கருப்பை வாய் மற்றும் கருப்பையின் உட்புறத்தைப் பரிசோதிக்கப் பயன்படும் ஹிஸ்டெரோஸ்கோபி செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. ஹிஸ்டெரோஸ்கோபிக் அடிசியோலைசிஸ் செய்யப்பட்டது, மேலும் கருப்பை உள் சதையை எடுத்து டிபி-பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி அவருக்கு கர்ப்பப்பை காசநோய் இருப்பதையும், அது அவரது கருப்பையைப் பாதித்து, அதன் மூலம் கர்ப்பத்தைத் தடுத்து வருவதையும் காட்டின. பின்னர் அவர் ஒரு காசநோய் நிபுணரிடம் பரிந்துரைக்கப்பட்டு, 9 மாத காசநோய் எதிர்ப்பு சிகிச்சையை முடித்தார். சிகிச்சைக்குப் பின் மீதமிருந்த கருக்களைப் பயன்படுத்தி தம்பதியினருக்கு இரண்டாவது முறையாக கரு உட்செலுத்தப்பட்டது. இந்த முறை, முடிவு சாதகமானதாக இருந்தது. கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. கரு வளர்ச்சி சீராக மேம்படத்தொடங்கியது. தம்பதியினர் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

மதுரையில் உள்ள நோவா ஐவிஎஃப் கருத்தரிப்பு மையத்தின் கருவுறுதல் நிபுணரான டாக்டர் சிந்தியா எம் கூறுகையில், “கருத்தரிப்பு சிகிச்சைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடையும் சந்தர்ப்பங்களில், அதே முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வதை விடுத்து, அதற்கான சரியான காரணத்தைக் கண்டறிவது முக்கியம். இந்தச் சந்தர்ப்பத்தில், கருப்பையின் உள் அடுக்கில் அறிகுறிகள் ஏதும் காட்டாமல் மறைந்திருந்த காசநோயே காரணம் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டால், கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. நோவா ஐவிஎஃப் ஃபெர்டிலிட்டி மையத்தில், மருத்துவ ரீதியாக சாத்தியமான இடங்களில் எல்லாம், தம்பதியருக்கு உயிரியல் ரீதியான குழந்தை கிடைப்பதை உறுதிசெய்ய நாங்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.  ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சை அளித்தால், சிக்கலான மலட்டுத்தன்மை உள்ள நிலையிலும் கூட வெற்றிகரமான பலன்களைப் பெற முடியும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form