இந்தியாவில் பண்டிகை காலம் வந்துவிட்டால் மகிழ்ச்சி, புதிய ஆரம்பம் மற்றும் மங்களகரமான பண்பாடுகள் களைகட்டத் துவங்கிவிடும். இதில் தங்கத்தை விட மகிழ்ச்சி தர வேறு என்ன இருக்க முடியும். இந்த பண்டிகை உணர்வுடன், பிலிப்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனம் ‘சோனே பே சுஹாகா’ என்கிற அதன் அகில இந்திய பிரச்சார முன்னெடுப்பைஅறிவித்துள்ளது; இது நுகர்வோருக்கு அவர்களது இல்லத்திற்கான நம்பகமான புதிய சாதனங்களை வழங்குவது மட்டுமில்லாமல், தங்க பரிசுகளையும் அளித்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்த ஒரு மாத கால பிரச்சாரமானது, பிலிப்ஸ் தயாரிப்புகளை ஷாப்பிங் செய்பவர்களுக்கு - தினமும், ஒவ்வொருமணி நேரத்திற்கும், ரூ. 9,999/- மதிப்புள்ள தங்கத்தை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. பிலிப்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனமானது ஒவ்வொரு மணிநேரத்திற்கான வெற்றியாளர்களை சமூக ஊடகங்கள், மற்றும் வானொலி மூலமாகவும்; தினசரி வெற்றியாளர்களை தேசிய செய்தித்தாள்கள் மூலமாகவும் அறிவிக்கவுள்ளது.
இந்த பிரச்சாரம் குறித்து பேசிய வெர்சுனி இந்தியா நிறுவனத்தின், தலைமை மார்கெட்டிங் அலுவலர், பூஜா பெய்ட் அவர்கள் கூறுகையில், “எங்களது இந்த 'சோனே பே சுஹாகா' பிரச்சாரத்தின் மூலம், தங்கத்தை வெல்லும் உற்சாகத்துடன் - பிலிப்ஸின் நம்பகமான மற்றும் புதுமையான சாதனங்களின் உத்தரவாதத்துடன் இணைக்கிறோம். இந்த பண்டிகை காலத்தில் கொண்டாட்டமான தருணங்கள் ஒவ்வொன்றிலும் மேலும் பிரகாசத்தை சேர்ப்பதற்கான ஒரு வழியாக இந்த முன்னெடுப்பை நாங்கள் கருதுகிறோம்,” என்று தெரிவித்தார்.
‘சோனே பே சுஹாகா’ என்கிற இப்பிரச்சாரம் பண்டிகை காலத்தை மேலும் மதிப்புமிக்கதாக மாற்றும் அதே நேரத்தில், இந்திய வீடுகளுக்கு பொருத்தமான, அர்த்தமுள்ள புதிய சாதனங்களைக் கொண்டு வருவேண்டும் என்கிற பிலிப்ஸ் பிராண்டின் நீண்டகால வாக்குறுதியையும் பிரதிபலிக்கிறது. செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 22, 2025 வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்த சிறப்புத் திருவிழாவில் பங்கேற்க நுகர்வோரை பிலிப்ஸ் வரவேற்கிறது. இத்தருணத்தில் நீங்கள் எந்தவொரு ஆஃப்லைன் ஸ்டோரிலோ (நேரடி ஷோரூம்) அல்லது பிலிப்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் வலைத்தளத்திலோ ரூ.1,000-க்கு மேல் ஏதேனும் ஒரு பிலிப்ஸ் தயாரிப்பை வாங்க வேண்டும், பின்னர் உங்களது கேம்பெயின் க்யூஆர் கோடு மூலம் பதிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.9,999/- மதிப்புள்ள கோல்டு வவுச்சர்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்; தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு அற்புதமான நிச்சயப் பரிசுகளும் உள்ளன. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு தயாரிப்பும் அதிக பலன் தருவதாக இருக்கும்.