நாகர்கோவிலில் இண்டீரியோ பை கோத்ரெஜ் கடை திறப்பு

 


கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குரூப் இன் ஒரு முன்னணி ஃபர்னிச்சர் பிராண்டான இன்டீரியோ பை கோத்ரேஜ், தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவிலில் புதிய கடையைத் தொடங்குவதை அறிவித்துள்ளது. 2000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தக் கடை, தமிழ்நாட்டில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை இருப்புக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும். குறிப்பிடத்தக்க குடியிருப்பு மற்றும் வணிக விரிவாக்கத்துடன் கூடிய ஒரு முக்கிய இடமான கோட்டாரில் அமைந்துள்ள இந்த கடை,   வரவேற்பு, படுக்கையறை, உணவருந்தும் அறை, வீட்டு பொருள் வைப்பு, மெத்தை மற்றும் பிராண்டிற்கான மிகப்பெரிய விற்பனையாகும் வகையான அலுவலக தளபாடங்கள் ஆகியவை முழுவதிலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தரமான தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த புதிய கடை அறிமுகத்தை முன்னிட்டு, இன்டீரியோ, வீட்டு ஃபர்னிச்சர்களுக்கு 35% வரை தள்ளுபடி வழங்குகிறது.

நாகர்கோவிலில் இந்த புதிய கடையின் துவக்கத்தைப் பற்றி பேசிய இன்டீரியோ பை கோத்ரேஜ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நுகர்வோர் வணிகத் தலைவர் டாக்டர் தேவ் நாராயண் சர்க்கர் கூறுகையில், "நாகர்கோவிலில் உள்ள எங்கள் புதிய நிறுவல், நவீன இந்திய வீடுகளுக்கு உயர் தரம், செயல்பாடு மற்றும் அழகியல் தோற்றம் ஆகியவற்றுடன் வாழ்க்கை இடங்களை வளப்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை முக்கியப்படுத்தி காட்டுகிறது. காட்சிக்கூடங்களுக்குள், வாடிக்கையாளர்கள் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலுடன் பல்வேறு வகையான பாணிகள், வடிவமைப்புகள் மற்றும் அம்சங்களை ஆராய்கின்ற வகையில், ஒரு ஆழ்ந்த ஷாப்பிங் அனுபவத்தை அனுபவிக்க முடியும். ஒகடையின் மூலோபாய இடம் மற்றும் சந்தையில் இன்டீரியோ வின் வலுவான மற்றும் வளர்ந்து வரும் பிராண்ட் அங்கீகாரம் காரணமாக, தமிழ்நாட்டில் நிதியாண்டு 26க்குள் கடையின் வருடாந்திர வருவாய் 1.5 கோடி ரூபாயை எட்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் புதிய கடையைத் திறப்பதன் மூலம், இன்டீரியோ பை கோத்ரேஜ்   குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் தனது தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. 2026 நிதியாண்டின் இறுதிக்குள் இந்த மாநிலத்தில் மேலும் 15 விற்பனை நிலையங்களைத் திறக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 25% வளர்ச்சியை அடையவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முழு மாநிலத்திற்குமான வருவாய் 60 கோடி மற்றும் தெற்கு பிராந்தியத்திற்கான வருவாய் 200 கோடி எட்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்."என்று கூறினார்.

இன்டீரியோ நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய விற்பனை வலையமைப்பு மூலம் ஒரு வலுவான, அனைத்து சேனல் ஃபர்னிச்சர் பிராண்டாக தன்னை நிறுவுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தானியங்கு முறைகள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்து வருகிறது.  எகனாமி வரம்பு Upmods தொடர், Kreations X3, ஸ்டீல் கிச்சன் 2.0 ஆகியவை உள்ளடங்கிய சமீபத்திய தயாரிப்பு வெளியீடுகள், தனிப்பயனாக்கப்பட்ட வழங்கல்களை செயல்படுத்துகின்ற கன்ஃபிகியூரேட்டர்கள், 3D பிளானர்கள் மற்றும் மார்க்கெட்டிங் கிளவுட் தீர்வுகள் மூலம் நுகர்வோருக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்குகின்றன. ஒரு தனிப்பயனாக்கப்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை உறுதிசெய்கின்ற இந்த மேம்பட்ட கருவிகள், இடையூறு இல்லாத தனிப்பயனாக்கல் விருப்பங்களை வழங்குகின்றன மேலும்  தனிநபர் விருப்பங்களை பூர்த்தி செய்கின்றன.

Post a Comment

Previous Post Next Post

Contact Form