டிரைவிங்கில் ஆர்வம் கொண்டவர்களின் உற்சாகத்தை மீண்டும் தூண்ட, ‘புகழ்பெற்றதாகக்’ கருதப்படும் ஆட்கோவியா ஆர்.எஸ். ஐ மீண்டும் அறிமுகப்படுத்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா தயாராக உள்ளது. ஸ்கோடா ஆட்டோவின் மிகவும் பிரபலாமான செயல்திறன் கொண்ட செடான் மீண்டும் வருவதைக் குறிக்கும் வகையில் புத்தம் புதிய ஆக்டோவியா ஆர்எஸ்-க்கான முன்பதிவுகள் அக்டோபர் 6 2025 அன்று தொடங்குகிறது. இந்த உலகப் புகழ்பெற்ற சின்னம் இந்தியாவில் ஃபுல்லி பில்ட் யூனிட்டாக (எஃப்பியு), குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கும். இந்த அறிமுகத்துடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஒப்பிடமுடியாத டிரைவிங் இயக்கம், சாகசத்திற்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் தனித்துவமான RS ஸ்பிரிட் ஆகியவற்றை வழங்குவதை உறுதி செய்கிறது, இது அனைத்தும் சிறந்த டிரைவிங் அனுபவத்திற்காக பர்ஃபாரமன்ஸ் வாகனத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
ஆக்டேவியாஆர்.எஸ். மீண்டும் வருவதைக் குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்டு இயக்குனரான ஆஷிஷ்குப்தா கருத்து தெரிவிக்கையில், “இந்த வருட தொடக்கத்தில் இந்தியாவிற்கு உலகப் புகழ்பெற்ற வாகனம் மீண்டும் வரும் என வாக்குறுதி அளித்திருந்தோம். இன்று ஆக்டோவியா ஆர்.எஸ். உடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பது குறித்து பெருமிதம் கொள்கிறேன். இந்த சின்னம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் ஆர்வலர்களின் மனங்களை கவர்ந்த மரபை தாங்கி வருகிறது. இந்தியாவில் புத்தம் புதிய ஆக்டோவியா ஆர்.எஸ்.இன் அறிமுகத்துடன் நாங்கள் ஒரு காரை மட்டும் இந்தியாவிற்கு மீண்டும் எடுத்துவரவில்லை. நாங்கள் ஒரு உணர்வை மீண்டும் எடுத்து வந்துள்ளோம். செயல்திறன், விருப்பம் மற்றும் ஓட்டுநர் ஆன்மாவை வரையறுக்கும் ஓட்டுவதின் உண்மை அனுபவத்தை வரையறுக்கும் புகழ்பெற்ற சின்னம்” என்றார்.
2025-ல் மீண்டும் அறிமுகமான புத்தம் புதிய ஆக்டோவியா ஆர்.எஸ்., இன்னும் நுணுக்கமாகவும், சாகசத்துக்கு ஏற்ற வகையிலும், தனித்துவமாகவும் விருப்பமான சின்னமாக திகழ்கிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் அக்டோபர் 6, 2025 முதல் குறைந்த காலத்திற்கு பிரத்யேகமாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் மட்டுமே ஏற்கப்படும்..
ராலி ஸ்போர்ட் அதாவது சுருக்கமான ஆர்.எஸ். பேட்ஜ் எனப்படுவது தலைமுறைகள கடந்து செயல்திறன், துல்லியம் மற்றும் ஓட்டும் அனுபவம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. ஸ்கோடாவின் மோட்டார் பந்தய வெற்றிகளில் இருந்து உருவான ஆர்.எஸ். மாடல்கல் சாலையில் மோட்டார் ஸ்போர்டிலிருந்து ஊக்கம் பெற்ற வடிவமைப்பின் சின்னமாக இருக்கின்றன. ஆக்டோவியா ஆர்.எஸ்., முதன்முதலில் இந்தியாவின் முதல் டர்போசார்ஜ்ட் பேட்ரோல் எஞ்சின் பாசஞ்சர் காராக 2004 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உடனடியாக ஆர்வலர்களிடையே தனித்துவமான ரசிகர் கூட்டத்தை உருவாகியது. அந்த நேரத்திலிருந்து, ஒவ்வொரு ஆர்.எஸ். தலைமுறையும் - ஐரோப்பிய பொறியியல், சூழலுக்கு ஏற்ற தன்மை, ஓட்டுவதன் உற்சாகம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் : ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் தனித்துவத்தைக் கொண்டுள்ளது.