ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடான பண்டிகை வரப்போகிறது. இந்தியாவில் பலராலும் அதிகம் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக் காலத்தில், ஒவ்வொரு இல்லமும் அதற்காக தயாராகி வருகிறது. இந்த சூழலில், முன்னணி மாடுலர் இண்டீரியர் பிராண்டான மேஜிக்ஹோம் இந்தியா, உங்கள் இல்லங்களுக்கு மகிழ்ச்சி, கலாச்சாரம் மற்றும் அழகினை வழங்குவதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அதன் பண்டிகைக்கால விளம்பர முன்முயற்சியான ‘சீசன் ஆஃப் மேஜிக்’ -ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த பிரச்சாரம் பண்டிகைக் காலங்களில் வீட்டின் இண்டீரியர் வடிவமைப்பு சேவைகள் குறித்த விழிப்புணர்வையும், அதற்கான தேவையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது; வழக்கமாக பண்டிகைக் காலத்தில் தான் வீடுகளின் மேம்பாடு மற்றும் அலங்காரத்தின் மீது அதிக கவனமும், செலவும் செய்யப்படுகிறது.
‘சீசன் ஆஃப் மேஜிக்,’ என்பது முதல் முறையாக ஒரு டிஜிட்டல் முன்முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மிஸ்டர் இந்தியா வேர்ல்ட் 2024 பட்டத்தை வென்ற கோகுல் கணேஷ் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறையில் தனது நடிப்பின் மூலம் தாக்கத்தை பிரபல நடிகை அண்ட் கண்டென்ட் கிரியேட்டர் மாதுரி பிரகன்ஸா ஆகிய இரண்டு பிரபலங்கள் இந்த பிராண்டுடன் ஒருங்கிணைந்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் மேஜிக்ஹோம் நிறுவனமானது, சென்னை, பெங்களூர் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்காக ஒரு பிரத்யேக சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள், வரும் அக்டோபர் இறுதி வரை ரூ.3 லட்சம் மதிப்புள்ள மாடுலர் கிச்சன் மற்றும் ரூ. 50,000 மதிப்புள்ள ஃபர்னிச்சர்களை முற்றிலும் இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்கள் பிடித்தமானவற்றை தேர்வு செய்ய 50,000-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகள் டிசைன் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன.
பிரச்சாரம் குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சீனியர் பொது மேலாளர் மற்றும் மார்கெட்டிங் ஹெட், ஜெயேஷ் சாலி, “மேஜிக்ஹோமைப் பொருத்தவரை, ஒரு வீடு என்பது ஒரு வாழ்விடம் என்பதைத் தாண்டி மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம் - நமது இல்லங்களில் தான் பாரம்பரியங்கள் கொண்டாடப்படுகின்றன, நினைவுகள் உருவாக்கப்படுகின்றன, அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. வீட்டின் உட்புற வடிவமைப்பின் மூலம் மேற்கூறிய அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை ‘சீ'சன் ஆஃப் மேஜிக்’ வழியாக நாங்கள் எடுத்துக்காட்ட விரும்பினோம். இந்த முன்முயற்சியானது மேஜிக்ஹோமின் வாக்குறுதியான - உலகளாவிய வடிவமைப்பு, மற்றும் தரத்துடன் சேர்த்து, பண்டிகைக்கால அழகியலுடன் தங்கள் இல்லங்களை எப்படி மாற்றி புதிய தோற்றம் தருகிறது, அதனால் குடும்பத்தினரை உற்சாகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.