டிவிஎஸ் ரேசிங்கின் ஐஸ்வர்யா பிஸ்ஸே, எஃப்.ஐ.எம் க்ராஸ் கன்ட்ரி ராலிஸ்வேர்ல்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யு2ஆர்சி) -பிபி அல்டிமேட் ராலி-ரெய்ட் போர்ச்சுகல் 2025 போட்டியில்ஆசியாவிலிருந்து முதன்முறையாக பங்கேற்ற முதல் பெண் என்ற வரலாறு படைத்துள்ளார்.
டக்கார் ராலிக்கான ஐஸ்வர்யா பிஸ்ஸேயின் பந்தயப் போட்டி பயணத்தில் முக்கியமான பயிற்சி மைல்கல்லாக இந்த சாதனை கருதப்படுகிறது. டபிள்யு2ஆர்சி ரேலி போட்டியின் நான்காவதுசுற்று செப்டம்பர் 28, 2025 அன்று முடிவடையும்.மொத்தம் 2,000 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் போட்டியில், ஒரு ப்ரொலக் மற்றும் ஐந்து நிலைகள் இருக்கின்றன.
100% சரளைக்கற்கள் மற்றும் மண்ணால் ஆன பாதை, போர்ச்சுகலின் அலெந்தேஜோ, ரிபடேஜோ பகுதிகளையும், ஸ்பெயினின் எக்ஸ்ட்ரமாதுரா பிரதேசத்தையும் கடந்து செல்கிறது. போர்ச்சுகலில் நடைபெறும் இந்தப் பந்தயப்போட்டியில் பங்கேற்பது, டகார் பந்தயத்திற்கு முக்கியமானதகுதிச் சுற்றுப்போட்டியாக கருதப்படும் மொராக்கோ ராலியில் அவர்கலந்து கொள்ள தயாராவதற்கு உதவும்.டகார் ரேலி 2026 ல் போட்டியிடும் முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெறுவதே ஐஸ்வர்யா பிஸ்ஸேவின் முக்கிய லட்சியமாக இருந்து வருகிறது. ஐஸ்வர்யாவின் இந்த குறிக்கோள், நாடு முழுவதிலும் உள்ள பெண் மோட்டார் பந்தய வீராங்கனைகள் பெரும் லட்சியக் கனவுகளைக் காணவும், எல்லைகளைத் தாண்டி சாதிக்கவும் தூண்டும்.
“இந்தப் பயணம் என் மனதிற்கு முழு திருப்தியையும் பெருமையையும் தந்திருக்கிறது. பந்தயக் களத்தில் நான் .இந்த நிலையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். நான் அடைந்த ஒவ்வொரு மைல்கல்லும், டிவிஎஸ் ரேசிங் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவு, சரியான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியைத் தொடர்வதற்கான வளங்கள் ஆகியவற்றினால் சாத்தியமாகி இருக்கின்றன. போர்ச்சுகலில் நடைபெறும் எஃப்.ஐ.எம்வேர்ல்ட் ரேலி-ரெய்ட் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுவது, எனது லட்சியக் கனவை அடைவதற்கு தயாராவதில் ஒரு முக்கியமான படியாகும்.எனது அடுத்த குறிக்கோள் மொராக்கோ ராலி. அது டகார் ராலிபோட்டிக்கான முக்கிய தகுதிச் சுற்றாகும். அதனால் என்னுடைய முழுக்கவனமும் ’டகார் ரேலி 2026’ மீதுதான் இருக்கிறது. மேலும் எல்லைகளைத் தாண்டவும், தடைகளை உடைக்கவும், உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் நான் எப்போதும் இல்லாத அளவுக்கு உறுதியாக இருக்கிறேன். எனது இந்தப் பயணம் உலகம் முழுவதும் உள்ள மோட்டார் பந்தய வீராங்கனைகள் தங்கள் மீது நம்பிக்கை வைக்கவும், தங்களது கனவுகளை அடையவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்’’ என்று டிவிஎஸ் ரேசிங் வீராங்கனை ஐஸ்வர்யா பிஸ்ஸே கூறினார்.
"டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவின் வணிகத் தலைவர் விமல் சம்ப்லி கூறுகையில், "இந்திய மோட்டார் விளையாட்டுகளில் டிவிஎஸ் ரேசிங் எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக சாம்பியன்களை உருவாக்கி, தடைகளை உடைத்து, திறமைகளை வளர்த்துவருகிறது. பந்தயத்தில் ஆர்வமும் திறமையும் உள்ள வீரர்களையும், வீராங்கனைகளையும் வளர்த்தெடுப்பதிலும், விளையாட்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், நாங்கள் காட்டிவரும் அர்ப்பணிப்பு நாங்கள் மேற்கொள்ளும் எல்லா முன்முயற்சிகளிலும் இருந்து வருகிறது.ஐஸ்வர்யா பிஸ்ஸே எங்களது இந்த தொலைநோக்குப் பார்வையின் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.. திறமைக்கு சரியான ஆதரவு வழங்கப்படுமானால் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை அவரது தைரியம், திறமை உறுதிப்பாடு ஆகியவை நிரூபித்து காட்டியிருக்கின்றன. டகார் 2026-க்கான தனது பாதையில், போர்ச்சுகல் பந்தயத்தில் இருக்கும் இந்த தருணம் அவர் ஒரு தனிப்பட்ட மைல்கல்லைத் தொடரவில்லை. அதையும் தாண்டி அவர் ஒரு தலைமுறை ரைடர்களை பெரும் கனவுகளைக் காணவும், தடைகளைத் தகர்க்கவும், உலக அரங்கில் போட்டியிடவும் ஊக்குவிக்கிறார்." என்றார்.