பலரும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் டிஸ்னியின் 'லிலோ & ஸ்டிட்ச்' திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாக, மேக்ஸ் ஃபேஷன் குழந்தைகள், டீனேஜ் பருவத்தினர்& இளைஞர்களுக்கான அதன் சமீபத்திய கலெக்ஷனை வெளியிட்டுள்ளது. இந்த அற்புதமான புதிய ரகங்கள் வெப்பமண்டலதீவுகளின் உணர்வையும், அவற்றின் அழகையும் வெளிப்படுத்தும் விதமாக,டிஸ்னி ரசிகர்களுக்கு புதிதான ஸ்டைல்களை மகிழ்ச்சியூட்டும் விதமாக வழங்குகிறது.
டிரெண்டியான மற்றும் அனைவருக்கும் ஏதுவான ஆடைகளுக்கு பெயர் பெற்ற முன்னணி ஃபேஷன் பிராண்டான மேக்ஸ் ஃபேஷனின் அற்புதமான இந்த கலெக்ஷன் மும்பையின் மெகுமி பகுதியில்நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வில் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் குழந்தை வளர்ப்பு வழிகாட்டுனர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் பங்கேற்ற ஒரு வேடிக்கையான பேஷன் வாக் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது திரைப்படத்தின் கதையில் வரும் தீவின்சாராம்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
நடிகை பிபாஷா பாசு இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக பங்கேற்று,இந்த புதிய கலெக்ஷனின் ஸ்டைலான அம்சங்கள் குறித்து எடுத்துக்கூறினார். இதில் டிஸ்னி திரைப்படத்தின் அடிப்படையிலான கற்பனையான அம்சங்களின் துடிப்பான பிரிண்ட்கள் - ஆரஞ்சு, ப்ரீஸி ப்ளூஸ், ரிஃப்ரெஷிங் கிரீன்ஸ் மற்றும் டிரீமி பேஸ்டல்ஸ் போன்ற பிரகாசமான கோடைகாலத்திற்கே உரிய நிறங்களில் ஆடைகளில் இடம்பெற்றுள்ளன.
மேக்ஸ் ஃபேஷனின் துணை தலைமை நிர்வாக அலுவலர் சுமித் சந்த்னா இதுபற்றி கூறுகையில், “நாங்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் டிஸ்னி-அடிப்படையிலான கலெக்ஷனை அறிமுகப்படுத்தினோம்; டிஸ்னியின் காலத்தால் அழியாத கதைகள் எங்களை எப்போதும் ஈர்க்கின்றன,” என்ற அவர்தொடர்ந்து பேசுகையில், “டிஸ்னியின் கிளாசிக் படைப்புகளால் பெறும் உத்வேகம், எங்கள் இளம் நுகர்வோரை எப்போதும்அந்த கலெக்ஷனுடன் இணைந்திருக்க உதவுகிறது. எங்களது சமீபத்திய 'லிலோ & ஸ்டிட்ச்' தீமில் வெளியான கலெக்ஷனும் டிஸ்னியுடனான எங்கள் வலுவான கிரியேட்டிவ்கூட்டு முயற்சிக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.” என்று தெரிவித்தார்.
“ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை முன்வைத்து மேக்ஸ் ஃபேஷன் இதுவரை பல ஆண்டுகளாக தனித்துவமான கலெக்ஷன்கள் பலவற்றை வெளியிட்டு அசத்தியுள்ளது; பிரபலமான கதாபாத்திரங்களை ஃபேஷனில் கொண்டுவரும் தேவை அதிகரித்து வருவதை மேக்ஸ் சரியாக பயன்படுத்தியுள்ளது; மேலும்,அந்த படைப்பாற்றல் மற்றும் திறமையை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றியும் கண்டுள்ளது. பெரியளவிலான, ஆக்கப்பூர்வமான மற்றும் அசத்தலானவழிகளில்பார்வையாளர்களைஒன்றிணைக்கவும் அவர்களுடனான ஈடுபாட்டை அதிகரிக்கவும் மேக்ஸின் இதுபோன்ற முன்முயற்சிகள் எங்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன,” என்று டிஸ்னி கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின், இயக்குனர் பிரியா நிஜாரா தெரிவித்தார்.