ரூ.49,999க்கு அறிமுகமாகியுள்ள மோட்டோ ரேசர் 60 ப்ளிப் போன்



மோட்டரோலா நிறுவனம் தனது பிரபல ரேசர் தொடரின் புதிய வடிவமான மோட்டோரோலா ரேசர்60ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.8 ஜிபி, 256ஜிபி வகை போன் ரூ.49,999 என்ற சிறப்பு விலையில் பிளிப்கார்ட் ரிலையன்ஸ் டிஜிட்டல், மோட்டோரோலா டாட் இன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வரும். இது பழைய ஃப்ளிப் போன்களின் வடிவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து வழங்குகிறது.

இந்த புதிய மாடல் 6.9 அங்குலம் அளவுடைய பிஒஎல்இடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. 144எச்இசட் ரெப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவு கொண்ட இதன் திரை, கண்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1.5 அங்குலம் அளவுடைய க்யுக் வியூ புறத் திரை, வாடிக்கையாளர்களுக்கான செயல்களை திறமையாகக் காட்டக்கூடியதாக உள்ளது.  ஐந்து லட்த்துக்கும் அதிகமான மடிப்புகளுக்கு சான்றழிக்கப்பட்டுள்ளது. சைகை மூலம் கட்டுப்படுத்தத்தக்க வீடியோ ரெக்கார்டிங் அம்சம் மற்றும் 100% ட்ரூ கலர் கேமராவுடன் கூடிய உலகின் முதல் ஃபிளிப் போன் இதுவாகும்.

64 எம்பி ஐஓஎஸ் கேமரா மற்றும் 32எம்பி செல்ஃபி கேமரா மூலம், புகைப்படமும் வீடியோ அழைப்புகளும் சிறப்பாக அமைகின்றன. பின்புறத்தில் உள்ள வேகன் லெதர் பீனிஷ், ஸ்டைலுக்கும் வசதிக்கும் சிறந்த இணைப்பாக அமைகிறது. வெளிப்புற டிஸ்பிளேயில் மோட்டோ ஏஐ மற்றும் ஜெமினி இந்த போனின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

ஜூன் 6 முதல் மோட்டோரோலா டாட் இன், ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி ரீட்டெய்ல் கடைகளில் கிடைக்கும் இந்த மாடல், ஃபோல்டபிள் ஃபோன் பிரியர்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்குகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form