கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரியில் தொடக்கம்



மக்களிடையே கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரோட்டரி சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கிய விழிப்புணர்வு பயணம் சுமார் 2500 கி.மீ.தூரம் பயணித்து கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.

மதுரை டவுன் டவுன் (ரோட்டரி மாவட்டம் 3000) மற்றும் ரோட்டரி க்ளப் ஆப் திருநெல்வேலி தாமிரபரணி (ரோட்டரி மாவட்டம் 3212) ஆகியவை இணைந்து தமிழ்நாடு முழுவதும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பயண வாகனத்தை 13-05-2025 அன்று கன்னியாகுமரியில் தொடங்கியது. 

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் இந்த குழுவினர் புற்றுநோய்களுக்கான அறிகுறி, ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மற்றும் அதற்கான தடுப்பு ஊசி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்கள். மேலும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப் படுகிறது.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் நாகர்கோயில், திருநெல்வேலி, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோயில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி,  விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்லலூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு 19ம்தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது.

மொத்தம் 2500 கி.மீ. தூரம் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ள இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ராஜா கோவிந்தசாமி மற்றும் ரோட்டரி மாவட்டம் 3212 ஆளுநர் மீரான் கான் சலீம் ஆகியோரின் வழிநடத்துதல் படி ரோட்டரி கிளப் மதுரை டவுன் டவுன் தலைவர் திருமலையப்பன், செயலாளர் வேல்முருகன் மற்றும் ரோட்டரி கிளப் தாமிரபரணி திருநெல்வேலி தலைவர் பெருமாள், செயலாளர் ஷிவ் துரை ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பயணத்தில் மேற்படி மதுரையைச் சேர்ந்த ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆர்.வி.என்.கண்ணன் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் ஆறுமுக பாண்டியன் ஆகியோருடன் இணைந்து முன்னாள் உதவி ஆளுநர்கள்  பி.கே.சரவணன் மற்றும் பி.ரேமென்ட் பேட்ரிக் ஆகியோரும் பங்கேற்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form