டிசைன் கஃபே நிறுவனத்தை கைப்பற்றும் ஹோம்லேன்



இண்டீரியர் பிராண்டுகளான ஹோம்லேன், டூவுப், க்யூபிகோ மற்றும் ராப்ஸாப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான ஹோம்விஸ்டா டெகர் & ஃபர்னிஷிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட் ஹோம் இண்டீரியர்ஸ் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக விளங்கும்  டிசைன் கஃபே-ன் 100 சதவித பங்கை வாங்க இருப்பதாக அறிவித்தது. ஒழுங்குமுறை அங்கீகாரங்களுக்கு உட்பட்ட  இந்த கைப்பற்றுதல் வழங்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் இண்டீரியர்ஸ் பிரிவில் ஒரு மிகப்பெரிய நிறுவனமாக உருவாக வழிவகுக்கும். 

கைப்பற்றப்பட்ட பின் ஒருங்கிணைந்த நிறுவனமானது, 2024ஆம் நிதியாண்டில் எட்டப்பட்ட ரூ.7.61 கோடியிலிருந்து 33 சதவிதம் அதிகரித்து 2025ஆம் நிதியாண்டில் ரூ. 1000 கோடி வருவாய் ஈட்டி ஈபிஐடிடிஎ இலாபத்தன்மை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கைப்பற்றலானது உற்பத்தி, வடிவமைப்பு, கொள்முதல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற முக்கிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த வாய்ப்புகளை உருவாக்கும். இது இயக்க செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் புதிய கண்டுபிடிப்புகளைத் தூண்டும் மற்றும் கூட்டாக நிறுவனங்கள் வழங்கும் தயாரிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்யும். 

இந்த கைப்பற்றுதலுடன் கூடுதலாக புதிய நிதிச் சுற்றுல் ரூ.225 கோடி நிதி பெற்றுள்ளதையும் ஹோம்லேன் அறிவித்தது.  இந்த சுற்றில் ஹோம்லேன் மற்றும் டிசைன்கஃபே நிறுவனங்களின் தற்போதைய முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகள் மற்றும் ஹீரோ எண்டர்பிரைஸிலிருந்து வெளி முதலீடு ஆகிய இரண்டும் இந்த சுற்றில் அடங்கும். ஹீரோ எண்டர்பிரைஸின் பங்கு, இந்த கூட்டு நிறுவனத்தின் செயல்பாட்டு திட்டம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் அவர்களுக்கு இருக்கும் வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

இதுகுறித்து பேசிய ஹோம்லேன் நிறுவனத்தின் இணை உரிமையாளர்களான ஸ்ரீகாந்த் ஐயர் மற்றும் தனுஜ் செளத்ரி, “ எங்களின் தொழில்நுட்பம் சார்ந்து அணுகுமுறையை டிசைன் கஃபே-ன் வடிவமைப்பு தேர்ச்சியுடன் இணைப்பதன் மூலம் ஹோம் இண்டீரியர்ஸ் துறையில் முன்னனி நிலையை எட்ட முடியும் என உறுதியாக நம்புகிறோம்” என்றனர்.

இதுகுறித்து டிசைன் கஃபே நிறுவனத்தின் உரிமையாளகளான கீதா ரமணன் மற்றும் ஷெஸான் போஜானி பேசுகையில், “ஹோம்லேன் உடன் இணைவது இந்திய வீட்டு உரிமையாளர்களுக்கு டிசைன்களை மேலும் நியாயமான முறையில் வழங்கும் எங்கள் குறிக்கோளை ஊக்குவிக்கிறது. ஹோம்லேன் உடன் ஒருங்கிணைந்த எங்கள் பயணத்தை தொடர்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்” என்றனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form