இந்தியாவின் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட உணவு மற்றும் விவசாய வணிக நிறுவனங்களில் ஒன்றான கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் சமீபத்தில் தொலைபேசி அழைப்பின் மூலம் பயிர் பாதுகாப்பிற்கான நிகழ்நேர நிபுணர் தீர்வை வழங்குவதற்காக, பன்மொழி விவசாய ஆலோசனை சேவைமையம் திட்டமாக ‘ஹலோ கோத்ரெஜ்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், பெங்காலி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய எட்டு பிராந்திய மொழிகளில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அணுகக்கூடிய வகையில், இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு நேரடி களத்தில் அல்லது ஹெல்ப் லைன் எண் 022 2519 4491-க்கு அழைப்பு மூலம் தேவைப்படும் போதெல்லாம் உதவி புரிய வேண்டும், அதே நேரத்தில் விவசாயத்தையும் மேம்படுத்த வேண்டும் எனும் நிறுவனத்தின் பெருமுயற்சியுடன் இந்த செயல்பாடு ஒத்துப்போகிறது.
மாறிவரும் சீதோஷ்ண நிலையும், அதிகரித்து வரும் பூச்சித் தாக்குதல்களும் விவசாயிகளின் கவலையை அதிகப்படுத்தியுள்ளன. இந்நிலையில், விவசாயிகள் பயிர் பாதுகாப்பு தீர்வுகளை அவர்களின் விருப்பமான மொழியில் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அணுகுவதற்கு ஒரு நேரம் தேவை. இப்போது, “ஹலோ கோத்ரேஜ்” மூலம் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இப்போது விவசாய நிபுணர்கள் குழுவின் நேரடித் தொடர்பு மூலம் நிகழ்நேர ஆலோசனைகளைப் பெறலாம்.
கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பல்ராம் சிங் யாதவ் கூறுகையில், “விவசாயக் குடும்பங்களின் மேம்பாடு மட்டுமே கோத்ரெஜ் அக்ரோவெட்டில் நாங்கள் செய்யும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படை. சரியான நேரத்தில் சரியான தீர்வு கிடைப்பது சிறந்த விளைச்சலுக்கு இன்றியமையாததாக இருப்பதால், நிகழ்நேர தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கும் விவசாய நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க “ஹலோ கோத்ரெஜ்” பெரிதளவில் கைகொடுக்கும்” என்றார்
கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் நிறுவனத்தின் பயிர் பாதுகாப்பு வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜவேலு என்.கே கூறுகையில், "ஹலோ கோத்ரெஜ்" மூலம் நிறுவனமானது இந்திய விவசாயிகளின் நிலையான மற்றும் லாபகரமான விவசாயத்தை நோக்கிய பயணத்தில் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இருக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் பார்வையை உள்ளடக்கியது. கோத்ரேஜ் அக்ரோவெட்டின் விரிவான அனுபவத்தையும் நற்பெயரையும் பயன்படுத்தி, விவசாயிகளுடன் வலுவான, நம்பிக்கையான உறவுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நம்பகமான விவசாயத் தகவல்களுக்கான ஆதாரமாக இது அமைகிறது, இதனால் விவசாயத் துறையில் அதன் தலைமையை உறுதிப்படுத்துகிறது” என்றார்.