இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுள் ஒன்றான எச்டிஃப்சி லைஃப் அதன் சமீபத்திய விளம்பரத்தின் மூலம், எச்டிஎஃப்சி லைஃப் தனது பிராண்ட் இருப்பை விரிவுபடுத்தி ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் ஆழமாகச் சென்றடைய முயல்கிறது. உள்ளூர்மயமாக்கப்பட்ட சந்தைப்படுத்தல் உத்திகள் வாடிக்கையாளர்களிடையே வலுவான இணைப்பு மற்றும் உறவை ஏற்படுத்துவதற்கு முக்கியமானவை.
உள்ளூர் அளவில் எதிரொலிக்கும் கலாச்சார நுணுக்கங்கள் மற்றும் பிராந்திய குறிப்புகளை தொகுத்தளிக்கும் வகையில் விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தன் இருப்பை விரிவுபடுத்துவதற்கான நிறுவன உத்தியுடன், விளம்பரமானது பிராந்திய மொழிகளில் தொடர்பு கொள்வதன் மூலம் வரிசை 2 மற்றும் வரிசை 3 சந்தைகளில் பார்வையாளர்களின் நாட்டத்தை அதிகரித்து, அதில் அவர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருவர் தனது இலக்குகளை அடைவதற்கு ஒழுக்கம் மற்றும் முன்னேற்பாடு அவசியம் என்கிற பார்வையின் அடிப்படையில் விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலக்கு சந்தைகளில் வாங்குவதற்கு, குழந்தையின் கல்வி ஒரு குறிப்பிடத்தக்க தூண்டுதலாக இருக்கிறது என்கிற அடிப்படையில், இந்த விரிவுரை மிகவும் பொருத்தமானதாகிறது. படம் ஒரு தந்தை தனது மகளுக்கு வாழ்க்கை பாடமாக வெற்றியை அடைவதற்கு ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுப்பதை காட்டுகிறது.
விளம்பரம் பற்றி பேசிய ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மற்றும் குழுத் தலைவர் - விஷால் சுபர்வால், “வரிசை 2 மற்றும் வரிசை 3 சந்தைகளில் நாங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, வலுவான வினியோகம் மற்றும் புதிய கிளைகளுடன் பிராந்தியங்களுக்குள் ஆழமாக விரிவடையும் போது, வடிவமைக்கப்பட்ட பிராந்திய மொழி தகவல் பரிமாற்றத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதே எங்கள் குறிக்கோள். அதை நோக்கிய எங்களது முதல் அடியே, தெற்கு சந்தைகளை மையமாகக் கொண்ட இந்த விளம்பரம். பெற்றோர்களே எங்களது முக்கிய இலக்கு வடிக்கையாளர்கள், இந்த படத்தின் மூலம், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆதரிக்க அவர்களை ஊக்குவிப்பதோடு, நிதி ரீதியாக தயார்படுத்துவதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.
லியோ பர்னெட்டின் தெற்காசிய தலைமை கிரியேட்டிவ் அதிகாரி விக்ரம் பாண்டே பேசுகையில் "இந்த புதிய தந்தை-மகள் கதையின் மூலம், எச்டிஎஃப்சி லைஃப் எந்த ஒரு செயலிலும் நமது 100 சதவித முயற்யை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது” என்றார்.