க்ளியர் பிரீமியம் வாட்டர் நிறுவனம், பேக்கேஜிங் செய்யப்பட்ட குடிநீர் பிரிவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மேலும் இந்நிறுவனம் புதுமையான நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் தனித்துவமாக திகழ்கிறது. ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் மற்றவற்றில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து முக்கிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது, அதன் தயாரிப்புகள் பற்றிய தெளிவான மற்றும் வெளிப்படையான தகவல்களை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் தங்கள் மீதான நம்பிக்கைக்கு உறுதி அளிக்கிறது.
கிளியர் பிரீமியம் வாட்டரின் ஒவ்வொரு பாட்டிலும் அதன் சதுர வடிவ பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்குடன் தனித்து நிற்கிறது, ”க்ளியர்” என்ற தனித்துவமான பதிவு குறியைக் கொண்டுள்ளது. மேலும் நுகர்வோரை கவரும் வகையில் அதிநவீன தோற்றத்தை வழங்குகிறது.ஒவ்வொரு பாட்டிலிலும் அதன் உற்பத்தி ஆலையின் முழு முகவரியும் வெளிப்படைத் தன்மையுடன் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் தங்கள் தயாரிப்பு எங்கிருந்து வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
நம்பகத்தன்மையை மேலும் மேம்படுத்துவதற்கும், போலியை தடுப்பதற்கும், இதன் பக்கவாட்டில் தனித்துவமான சின்னத்தைக் கொண்டுள்ளத. இது பாட்டில்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது மற்றும் தயாரிப்பின் உண்மையான தன்மையை நுகர்வோருக்கு உறுதி செய்கிறது.பாட்டிலின் மூடி மற்றும் பாட்டிலும் "க்ளியர்" பிராண்டின் அடையாளத்தை காட்டும் வகையில் உள்ளது. கூடுதலாக, இதன் பிராண்ட் தூதரான பாலிவுட் சூப்பர் ஸ்டார், ஹிருத்திக் ரோஷன் படம் இந்த பாட்டில்களில் இடம் பெற்றுள்ளது. . 'க்ளியர்' என்று இந்த பாட்டிலின் முன்புறத்திலும் 'பிரீமியம் வாட்டர்' என்று இந்த பாட்டிலின் பின்புறத்திலும் ஒட்டப்பட்டு மற்ற குடிநீர் பாட்டில்களில் இருந்து வேறுபட்டு உள்ளது.
க்ளியர் பிரீமியம் வாட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நயன் ஷா கூறுகையில், நுகர்வோருக்கான விழிப்புணர்வு என்பது மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மேற்சொன்ன முக்கிய வேறுபாடுகளுடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு தேவையான அனைத்து தகவல்களும் எங்கள் பாட்டில்களில் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இவை வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்திற்கான எங்கள் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன” என்றார்.