ஏஇஎஸ்எல் ஸ்காலர்ஷிப் தேர்வு ஆன்தே 2024 அக்டோபர் 19 முதல் 27 வரை நடைபெற உள்ளது



15 ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் முதன்மை ஸ்காலர்ஷிப் தேர்வான ஆன்தே மூலம், தேர்வு தயாரிப்பு துறையில் முன்னனியில் இருக்கு ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் எக்ஸாம் 2024-ன் சமீபத்திய பதிப்பின் தொடக்கத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. தேர்வுக்குப் பிறகு 7 முதல் 12 வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மருத்துவம் அல்லது பொறியியலில் வெற்றிகரமான வாழ்க்கையை அடைய அவர்களின் கனவுகளை அடைய உதவுவதோடு, குறிப்பிடத்தக்க ரொக்க விருதுகளுடன் 100 சதவித்ம் உதவித்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.

 இந்த ஆண்டு, ஐந்து சிறந்த மாணவர்கள், அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டருக்கு 5 நாள் அனைத்து செலவுகளும் உட்பட பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.  நீட், ஜேஇஇ மாநில சிஇடி-கள் மற்றும் என்டிஎஸ்இ மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஆகாஷின் விரிவான பயிற்சித் திட்டங்களிலிருந்து ஆன்தே உதவித்தொகை பெறுபவர்கள் பயனடைவார்கள். 

தனது 15வது வெற்றிகரமான ஆண்டைக் கொண்டாடும் ஆன்தே, சிறந்த சாதனையாளர்களை வளர்ப்பதில் மகத்தான சாதனை படைத்துள்ளது. ஆன்தே மூலம் ஆகாஷில் சேர்ந்த மாணவர்களில் பலர் நீட் யுஜி மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டில் முதல் தரவரிசைகள் உட்பட மதிப்புமிக்க தேர்வுகளில் சிறந்து விளங்கியுள்ளனர்.  

ஆன்தே 2024 அக்டோபர் 19-27, 2024 வரை இந்தியாவில் உள்ள 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் நடைபெறும். 100 சதவிதம்  வரையிலான உதவித்தொகையுடன் கூடுதலாக முதன்மை மதிப்பெண் பெறும் மாணவர்கள் ரொக்கப்பரிசுகளையும் பெறுவார்கள். ஆன்தே ஆஃப்லைன் தேர்வுகள் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நாடு முழுவதும் உள்ள ஆகாஷ் இன்ஸ்டிடியூட்-ன் 315க்கும் அதிகமான மையங்களில் நடத்தப்படும். 

ஆன்லைன் தேர்வுகள் அக்டோபர் 19 முதல் 27, 2024 வரை தேர்வு நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். மாணவர்கள் அவர்களுக்கு ஏற்ற ஒரு மணி நேர ஸ்லாட்டை தேர்வு செய்யலாம்.

ஆன்தே 2024க்கான பதிவுப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆன்லைன் தேர்வு தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும், ஆஃப்லைன் தேர்வு தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பும் ஆகும். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தேர்வுக்கான கட்டணம் ரூ. 200 ஆகும். மாணவர்கள் 15 ஆகஸ்ட் 2024க்கு முன் பதிவு செய்தால், பதிவுக் கட்டணத்தில் 50 சதவிதம் தள்ளுபடியைப் பெறலாம். 

ஆன்தே 2024க்கான முடிவுகள் நவம்பர் 08, 2024 அன்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 13, 2024 அன்றும், 7 முதல் 9 வகுப்பு வரையிலும், நவம்பர் 16, 2024 இல் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவிக்கப்படும். முடிவுகள் எங்கள் ஆன்தே இணையதளத்தில் anthe.aakash.ac.in.இல் வெளியிடப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பல விருப்பத்தேர்வுகளை கொண்டிருக்கும் 40 கேள்விகளையும் மற்றும் அதற்கு மொத்தத்தில் 90 மதிப்பெண்களையும் கொண்ட தேர்வாக ஆன்தே நடத்தப்படும்.  7 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் அறிவுத்திறன் போன்றவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும்.  மருத்துவ கல்வி பயில விரும்பும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும்.  அதே வகுப்பு பயிலும் மாணவர்கள் பொறியியலில் சேர விரும்புகிறபோது அவர்களுக்கான கேள்விகள், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் அறிவுத்திறன் ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படும்.  

அதைப்போலவே நீட் தேர்வை எழுத விரும்பும்11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளிலும் மற்றும் பொறியியல் சார்ந்த தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இருக்கும்.

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் சிஇஓ மற்றும் எம்டி தீபக் மெஹ்ரோத்ரா பேசுகையில், "எண்ணற்ற மாணவர்களின் அபிலாஷைகள் மற்றும் திறன்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைப்பதில் ஆன்தே முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆன்தே 2024 உடன், வருங்கால மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களை வளர்ப்பதற்கும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறையில் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் முன்னோடிப் பணிகளைச் செய்த ஏபிஜே அப்துல் கலாம், எச்ஜி கொரானா, எம்எஸ் சுவாமிநாதன் மற்றும் ஜேசி போஸ் போன்றோரைத் தேடுவதற்கும் தேசிய திறமை தேடல் தேர்வை தொடங்குகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form