கேபிசி குளோபல் லிமிடெட் முத்துசுப்ரமணியன் ஹரிஹரனை, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது



கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் துறையில் முன்னணி நிறுவனமான கேபிசி குளோபல் லிமிடெட், வணிக விரிவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை ஆராயும் நோக்கத்துடன், 09 ஜூலை 2024 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஒ-ஆக முத்துசுப்ரமணியன் ஹரிஹரனை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. நிறுவனம் மும்பையில் மைத்ரியா பிசினஸ் பார்க், காஸ்மோஸ் வங்கி, ஹனுமான் சாலை, வைல் பார்லே எனும் இடத்தில் கார்ப்பரேட் அலுவலகத்தை திறந்துள்ளது. 

 ஜூலை 08, 2024 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில், அவரது நியமனத்தை உறுதி செய்தனர். தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் தேதி வரை அவர் பதவியில் இருப்பார். முத்துசுப்ரமணியன் ஹரிஹரன் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய வணிக மேம்பாட்டிற்கு தலைமை வகுத்து நிறுவனத்தின் மூலோபாயத் திட்டத்தை செயல்படுத்துதல், நிறுவனத்தின் பார்வை, நோக்கம் மற்றும் மூலோபாய நோக்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்பார்.

2007 இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. இந்தியாவின் நாசிக்கில் குடியிருப்பு மற்றும் மற்றும் அலுவலக குடியிருப்பு திட்டங்களின் வளர்ச்சி மற்றும் விற்பனையில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. நிறுவனம் குடியிருப்பு மற்றும் வணிகத் திட்டங்களின் கட்டுமானம் மற்றும் மேம்பாடு மற்றும் ஒப்பந்தத் திட்டங்களில் முதன்மையாக செயல்படுகிறது. 

நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் விரிவாக்கத்திற்கான மூலோபாய திட்டங்களையும் அறிவித்துள்ளது. நிறுவனம் மகாராஷ்டிராவின் நாசிக்கில் அதன் பல்வேறு தற்போதைய திட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக அலகுகளுக்கான உடைமைகளை ஒப்படைத்துள்ளது. குழு ஏப்ரல் 2024 முதல் மொத்தம் 109 யூனிட்களை உடைமையாக ஒப்படைத்துள்ளது.

சமீபத்தில், நிறுவனத்திற்கு சிஆர்ஜேஇ  லிமிடெட் மூலம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள துணை ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கேபிசி குளோபலின் முழுச் சொந்த கென்ய துணை நிறுவனமான கர்டா இண்டர்நேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மூலம் பெறப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் நிறுவனம் ஆப்ரிக்க சந்தையில் அதன் தடத்தை விரிவாக்கம் செய்வதை எடுத்துக்காட்டுகிறது. கேபிசி குளோபலின் வளர்ந்து வரும் திறன்களையும் சர்வதேச உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நிறுவனம் கொண்டிருக்கும் நற்பெயரையும் இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. இந்த சாதனையின் மூலம், கிழக்கு ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க கேபிசி குளோபல் தயாராக உள்ளது, இது பிராந்தியத்தின் லட்சிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு இலக்குகளுடன் இணைந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form