இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலைநகரான கோவையில் கேடிஎம் கப் சீசன் 2-ன் முதல் ரேஸ் நடைபெற்றது



உலகின் நம்பர் 1 ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம், இந்தியாவின் மோட்டார்ஸ்போர்ட் தலைநகரான கோயம்புத்தூரில், இந்தியாவின் மிகப்பெரிய பந்தய சாம்பியன்ஷிப்பான கேடிஎம் கப்பின் இரண்டாவது சீசனை தொடங்கியது.  கோயம்புத்தூர் கரி மோட்டார் ஸ்பீட்வேயில், தென் மண்டல தகுதிச் சுற்று போட்டிகள், இரண்டு நாட்களாக நடந்தன. பங்கேற்பாளர்கள் நிறுவனம் வழங்கிய கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள்களில் சவாரி செய்து, பிராண்டின் ‘ரெடி டு ரேஸ்’ தத்துவத்திற்கேற்ப சிறந்த அனுபவத்தைப் பெற்றனர்.

 கேடிஎம் கப் சீசன் 2 இன் தென் மண்டல தகுதிச் சுற்றில் ரைடர்கள் ப்ரோ, அமேச்சூர் மற்றும் பெண்கள் என்ற பிரிவுகளில் கடுமையான போட்டியை எதிர்கொண்டனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் தென் மண்டலத்தில் உள்ள 25 நகரங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 214 பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.  கேடிஎம் கப் சீசன் 2 அதன் வடக்கு மண்டல தகுதிச் சுற்றை ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நொய்டாவில் நடத்தும். கேடிஎம் கப் சீசன் 2 க்கான பந்தய இயக்குனர் முன்னாள் மோட்டோஜிபி ரேசர் ஜெர்மி மெக்வில்லியம்ஸ் ஆவார், இவர் 500சிசி வகுப்பில் இரண்டு போடியங்களையும் 250சிசி வகுப்பில் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளார். இம்மானுவேல் ஜெபராஜ் கஸ்டோ ரேசிங் இந்தியாவின் நிறுவனர் ஆவார். இவர் ஏழு முறை தேசிய ஐஎன்எம்ஆர்சி சாம்பியன்  பட்டம் பெற்றுள்ளார்.  பந்தய நிபுணராக பணியாற்றுகிறார்.


ரேஸ் அகாடமி மற்றும் நான்கு மண்டலங்களுக்கான தேர்வுகள் கோயம்புத்தூர், நொய்டா, தானே மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்படும். நான்கு நகரங்களைச் சேர்ந்த தலைசிறந்த 20 ரைடர்கள் கோயம்புத்தூரில் நடைபெறும் தகுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள். கோயம்புத்தூரில் நடைபெறும் கேடிஎம் கப் சீசன் 2 இன் இறுதிப் போட்டியில், தகுதிச் சுற்றுப் போட்டியின் தலைசிறந்த போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.  கேடிஎம் கப் சீசன் 2 இன் முதல் 3 வெற்றியாளர்கள், ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க்கில் உள்ள ரெட் புல் ரிங்கில் கேடிஎம் பயிற்றுனர்கள் மற்றும் முன்னாள் கிராண்ட் பிரிக்ஸ் வெற்றியாளர்களுடன் பயிற்சி பெறுவதற்கான பிரத்யேக வாய்ப்பை வெல்வார்கள். ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் பவர்ட்ரிஃப்ட் உடன் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்.


பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் (புரோகிங்) சுமீத் நரங் பேசுகையில், “கோயம்புத்தூரில் கேடிஎம் கப் சீசன் 2-வை கொடியசைத்து துவக்கி வைத்தது எங்கள் அனைவருக்கும் சிறந்த அனுபவமாக இருந்தது. இன்றைய பந்தயங்கள் மிகச் சிறந்ததாக இருந்தது மேலும், அனைத்து பிரிவிலும் தகுதி பெற்ற ரைடர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அனைவரும் ட்ராக்கில் மிகச் சிறப்பாக பங்கேற்றனர்.  ஏப்ரலில் நொய்டாவில் நடைபெறவுள்ள அடுத்த சுற்று பந்தயங்களை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இதில் பங்கேற்கும் பந்தய வீரர்கள் ஒரு படி மேலே சென்று ஆஸ்திரியாவில் கேடிஎம்-ன் சாராம்சத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form