ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடிய நிதித் தீர்வுகளின் வரிசையை வழங்க நோக்கமாகக் கொண்டு, கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் நுழைவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க படி முன்னேறியுள்ளது. இந்த கூட்டணி வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் முன்னேற்ற சூழலை வளர்பதற்கு உறுதியளிக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது. இந்த ஒப்பந்தம் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்துவதற்கும், வங்கிகள் இல்லாத மற்றும் குறைந்த வங்கிகள் உள்ள இடங்களில் மக்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் அர்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த கூட்டாண்மை மூலம், கேர் ஹெல்த் இன்சூரன்ஸின் சிறப்பான மற்றும் புதுமையான ஹெல்த் இன்சூரன்ஸ் தீர்வுகளை ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பரந்த வாடிக்கையாளர் நெட்வொர்க்கிற்கு விரிவுபடுத்தும். இந்த தயாரிப்புகள் ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களின் சில்லறை மற்றும் குழு பிரிவுகள் இரண்டிற்கும் ஏற்றவாறு இருக்கும். இந்த ஒத்துழைப்பு வங்கியின் தற்போதைய தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேவைகளின் போர்ட்ஃபோலியோவை மேம்படுத்துகிறது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உடல்நலக் காப்பீட்டுத் தேவைகளுக்கான விரிவான தீர்வை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது.
இணைவு குறித்து பேசிய ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் எம்டி அண்ட் சிஇஓ கே பால் தாமஸ், ”கேர் ஹெல்த் இன்சூரன்ஸ் உடனான எங்கள் கூட்டாண்மை மூலம் நிதி நெருக்கடிகளுடனான உடல்நல குறைவு பிரச்சனைகளைக் குறைத்து எங்கள் வாடிக்கையாளர்கள் நியாயமான விலையில் அதிநவீன மருத்துவ சேவைகளை அணுகுவதை உறுதிசெய்கிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், ஒவ்வொரு தனிநபருக்கும் அதிகாரமளிக்கும் வகையில் எங்கள் பலத்தை பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது” என்றார்.
கேர் ஹெல்த் இன்சூரன்ஸின் எம்.டி அண்ட் சி.இ.ஓ அனுஜ் குலாட்டி கூறுகையில், "நிதிச் சேர்க்கையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தரத்தையும் உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகவும் நம்பகமான வங்கிகளில் ஒன்றான ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இவர்கள் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தரமான சேவையின் ஆதரவுடன் வாடிக்கையாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு தீர்வுகளை வழங்கி சிறந்த மருத்துவ தீர்வுகளை அணுகக்கூடியதாக ஆக்குகின்றனர்” என்றார்.