ரொபாட்டிக் அறுவை சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் எஸ் எஸ் இனொவேஷன்ஸ்

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே உள்ளூர் தயாரிப்பான சர்ஜிகல் ரொபாட்டிக் அமைப்பான - எஸ்எஸ்ஐ மந்த்ரா - தயாரிப்பாளர்களான  எஸ்எஸ் இனொவேஷன்ஸ் பன்னாட்டு பன்னோக்கு ரொபாட்டிக் அறுவை சிகிச்சை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இரு நாள்கள் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ரொபாட்டிக் அறுவை சிகிச்சையின் எதிர்காலம் குறித்து விவாதிக்கவும், அறுவை சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு மற்று கம்பியில்லா வலையமைவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும்,  உலகெங்கிலும் இருந்து 150க்கும் அதிகமான பிரபல மருத்துவர்கள் பங்கேற்றனர். 

 இரு நாள் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, எஸ்எஸ்ஐ மந்த்ராவுடன் இணைந்து பிரபல ரொபாட்டி அறுவை சிகிச்சை நிபுணர்கள்  நேரலையாக அறுவை சிகிச்சைகள் நடத்திக் காட்டினார்கள்.

பன்னாட்டு மருத்துவ நிபுணர்கள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாளர்கள், தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் எஸ்எம்ஆர்எஸ்சி 2024 மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக விளங்கும்.  எஸ்எஸ்ஐ மந்த்ரா ரொபாட்டிக் அறுவை சிகிச்சை அமைப்பின் மீது சிறப்பு கவனத்துடன், ரொபாட்டிக் அறுவை சிகிச்சையின் எதிர்காலம் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். 

எஸ்எஸ்ஐ மந்த்ரா ரொபாட்டிக் அறுவை சிகிச்சை அமைப்பு ரொபாட்டிக் அறுவை சிகிச்சையில் அனைவரும் தேர்வு செய்யும் அமைப்பாகத் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவயியல், சிறுநீரகயியல், இதய மருத்துவ அறுவை சிகிச்சையியல், நுரையீரல் மருத்துவ அறுவை சிகிச்சையியல் உள்பட 550க்கும் அதிகமான பன்நோக்கு ரொபாட்டிக் அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்துள்ளது.

எஸ்எஸ் இனொவேஷன்ஸ் நிறுவனர், அவைத் தலைவர் மற்றும் சிஇஓ டாக்டர் சுதீர் ஸ்ரீவாத்சவா தனது உரையில் ‘எஸ்எஸ் இனொவேஷன்ஸ் முதல் பன்னாட்டு பன்னோக்கு ரொபோடிக் அறுவை சிகிச்சை மாநாடு 2024இன் முக்கிய நோக்கம், சிந்தனைத் தலைவர்கள், மருத்துவர்கள், மற்றும் தொழிற்துறை வல்லுநர்களை ஒன்றிணைப்பதாகும். மேலும், இதன் மூலம், ரொபாட்டிக் அறுவை சிகிச்சை துறையில், ஒத்துழைப்பு, அறிவுப் பரிமாற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதும் ஆகும். இந்த மாநாடு எஸ்எஸ்ஐ மந்த்ரா அறுவை சிகிச்சை ரொபாடிக் அமைப்புடன் இணைந்து எதிர்கால சுகாதாரத்திற்கான களத்தை உருவாக்கும்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form