நூற்றாண்டை நிறைவு செய்யும் முருகப்பா குழுமத்தின் ஏ.எம்.எம். அறக்கட்டளை!



முருகப்பா குழுமத்தின் ஏ.எம்.எம். அறக்கட்டளை சார்பில் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தில் (சி.எஸ்.ஆர்.) சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் ஏ.எம்.எம். மருத்துவமனையில் நூற்றாண்டு வளாக கட்டிடம் தொடங்கி வைத்து வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை பதிவு செய்துள்ளது. இந்த விழாவுக்கு விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி  தலைமை வகித்தார். 

ஏ.எம்.எம். அறக்கட்டளை பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பாரம்பரியமாக நடத்தி வருவதை நினைவுகூறும் வகையில், வரலாற்றறிஞர் எழுதிய A Century of Service (நூற்றாண்டு கால சேவை) என்ற தலைப்பிலான காஃபி டேபிள் புத்தகத்தின் முதல் பிரதியை விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி வெளியிட முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பேசுகையில்,பொது சேவையில் ஈடுபட, ஒருவர் முதலில் அவ்வாறு செய்ய விருப்பமாக இருக்க வேண்டும். மேலும், ஏ.எம்.எம். அறக்கட்டளை தாங்கள் சமூகத்திற்கு மீண்டும் சேவை மூலம் திருப்பி கொடுக்க எவ்வளவு தயாராக உள்ளது என்பதைக் காட்டியுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி பேசுகையில், எந்த ஒரு செயலும் சிறுமையானது அல்ல. நாம் மிகப்பெரிய நாடு என்பதில் சந்தேகமில்லை, மாறாக நமது சவால்களும் மிகப்பெரியதாகும். மேலும், நமது நிர்வாக அமைப்பில் பல தரப்பட்ட அம்சங்களை மேம்படுத்த வேண்டியது என்பதிலும் சந்தேகமில்லை. அதேவேளையில் பெரிய மாற்றங்கள் நடக்கும் என்று காத்து கொண்டிருக்க முடியாது. எனவே,  நம் சமூகத்திற்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்றார்.

ஏ.எம்.எம். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஏ.அழகப்பன், அறக்கட்டளையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசுகையில் "அடுத்த நூற்றாண்டில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் என நான்கு முக்கிய பிரிவுகள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும் போது சமூகத்திற்கு நன்மை அளிக்கும் முயற்சிகளை விரிவுபடுத்துவோம்," என்றார். 



Post a Comment

Previous Post Next Post

Contact Form