க்ரெசண்டா சொல்யூஷன்ஸ் லிமிடெட் 2024ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சிறந்த முடிவுகளைக் காட்டியுள்ளது



அதிநவீன ஐடி, டிஜிட்டல் மீடியா மற்றும் ஐடி-யினால் இயக்கப்படும் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முக்கிய ரயில்வே கன்சியர்ஜ் சேவை வழங்குநர் நிறுவனமான கிரெசண்டா சொல்யூஷன்ஸ் லிமிடெட், 2024ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சிறந்த முடிவுகளைப் பதிவு செய்துள்ளது.  நிறுவனம்  2024ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் செயல்பாடுகள் மூலம் ரூ. 19.49 கோடி, வருவாயை ஈட்டியுள்ளது. இது 2024ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு வருமானம் ரூ.14.13 கோடியுடன் ஒப்பிடும் போது  38% வளர்ச்சி பெற்றுள்ளது. 2024ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 5.1 கோடியாக உயர்ந்த்துள்ளது. நிறுவனத்தின் 2024ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டின் நிகர லாபம் ரூ.12 லட்சம் ஆகும். 

நவம்பர் 10, 2023 அன்று நடைபெற்ற போர்டு மீட்டிங்கில், நிறுவனத்தின் பெயரை "கிரெசண்டா சொல்யூஷன்ஸ் லிமிடெட்" என்பதிலிருந்து "கிரெசண்டா ரயில்வே சொல்யூஷன்ஸ் லிமிடெட்" என மாற்ற இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2023ஆம் நிதியாண்டின் முழு ஆண்டிற்கு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 6.08 கோடி ஆகும். ஆனால்  2024ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 5.1 கோடியை எட்டியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக நிறுவனம் சமீபத்திய காலங்களில் பல மூலோபாய முயற்சிகளை எடுத்துள்ளது.

 நவம்பர் 9, 2023 அன்று முழு உரிமையுடைய துணை நிறுவனமான “கிரெசாண்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொல்யூஷன்ஸ் லிமிடெட்” (WOS) நிறுவனத்தை சமீபத்தில் இணைத்தது. ஈமு ரயில்களில் விளம்பரம் வழங்குவதற்கு ஈஸ்டர்ன் ரயில்வே, ரயில்வே அமைச்சகம் மூலம் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஏலத்தைப் பெற்றது. அஞ்சல்/எக்ஸ்பிரஸ் மற்றும் பிரீமியம் ரயில்களில் விளம்பரத்துடன் கூடிய வரவேற்பு சேவைகள், கிழக்கு இரயில்வேயால் முதன்மை பராமரிப்பு செய்யப்படும் ரேக்குகளுடன் இயக்கப்படும் சேவையையும் வழங்குகிறது. நிறுவனம் செப்டம்பர் 27, 2023 அன்று மாஸ்டர் மைண்ட் அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 51% பங்குகளை வாங்குவதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அருண் குமார் தியாகியை இணை நிர்வாக இயக்குநர் மற்றும் செயல் இயக்குனராகவும், சந்தர் பிரகாஷ் ஷர்மா நிறுவனத்தின் சுதந்திர இயக்குநர் மற்றும் தலைவராகவும், விஜய் சோலங்கியை தலைமை தொழில்நுட்ப அதிகாரி-ஆகவும் மற்றும் ராஜ்குமார் தினேஷ் மசாலியாவை அதன் இயக்குநர்கள் குழுவின் நிர்வாக இயக்குநராக அறிவித்தது. இவர்கள் ஆகஸ்ட் 7, 2023 முதல் செயல்பட்டு வருகின்றனர். 

இந்த மூலோபாய பரிணாமம் நிறுவனம் பரந்த நிறுவன வாய்ப்புகளை திறம்பட பூர்த்தி செய்ய உதவுகிறது. நிறுவனத்தின் புதிய மாற்றங்கள் தொழில்துறையில் முன்னணி கூட்டுப்பணியாளர்களுடன் கூட்டுறவை உருவாக்கியுள்ளது மற்றும் விரிவான டொமைன் அறிவைப் பெற உயர் திறமையான நிபுணர்களின் குழுவை கூட்டியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form