உலகின் மிகவும் சௌகரியமான ஃபூட்வேர்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற, இங்கிலாந்தை மையமாகக் கொண்ட காலணி பிராண்டான ஃபிட்ஃப்ளாப், ‘ஃபார் பீப்புள் ஹூ மூவ்’ என்ற புதிய விளம்பர பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது. பிரபல நடிகர் அகில் அக்கினேனி, புகழ்பெற்ற பேஷன் பத்திரிகையின் தலைமை எடிட்டர் நந்தினி பல்லா, உடல் நல நிபுணரான அன்ஷுகா பர்வானி, பிரபல திருமண புகைப்படக் கலைஞரான ஜோசப் ராதிக் மற்றும் ஸ்னீக்கர் துறையில் வெற்றிகரமான ஒரு வணிகத்தை உருவாக்கிய ஸ்டார்ட்அப் நிறுவனர் வேதாந்த் லம்பா ஆகியோர் இந்த புதிய விளம்பரப் பிரச்சாரங்களில் நடித்துள்ளனர் .
பிரபலங்கள் அனைவரும் ஃபிட்ஃப்ளாப் பிராண்டின் சமீபத்திய கலெக்ஷன்களிலிருந்து எண்ணற்ற ஸ்டைல்களை அணிந்திருப்பதைக் காணலாம். அவை அனைத்தும் தொடர்ந்து நடைபோடும் கால்களுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேண்டிட் கேமரா பதிவுகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரப் படைப்பு தங்கள் இலக்குகளை அயராது எட்டிப்பிடித்த இந்த சாதனையாளர்களின் உழைப்பிற்கு உற்ற துணையாக ஃபிட்ஃப்ளாப் அவர்களுடன் பயணிக்கிறது.
காலணிகளுக்கான தனித்துவமான தொழில்நுட்பம் மற்றும் சௌகரியத்தின் மூலம், அவர்களது புகழை செதுக்குவதற்கு ஃபிட்ஃப்ளாப் உதவுகிறது. ஆளுமை நிறைந்த இந்த ஐந்து பிரபலங்கள் ஒவ்வொருவரும் ஃபிட்ஃப்ளாப் பிராண்டின் அடிப்படை கொள்கைகளுக்கு உயிரூட்டுபவர்களாகவும், அவரவர் தொழில்துறையில் அவர்களின் செயல்பாடுகள், மற்றும் மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுபவர்களாகவும் உள்ளனர்.
ஃபிட்ஃப்ளாப் பிராண்டு ஸ்டேட்மென்ட் சாண்டல்ஸ் முதல் கிளாசிக் ஒயிட் டிரைனர்ஸ், பாலே ஃபிளாட்ஸ் மற்றும் பீச் ஃபிளிப்-ஃப்ளாப்ஸ், ஈஸி ஸ்லைடர்ஸ் மற்றும் தினசரி ஷூஸ் வரை, எண்ணற்ற ரகங்களில் தயாரிப்புகளை வழங்கிவருகிறது. மூன்று லெவல் டார்கெட்டட் குஷன் அம்சத்துடன் அல்ட்ரா-கம்ஃபோர்ட் அண்டர்ஃபுட் தொழில்நுட்பத்துடன் ஃபிட்ஃப்ளாப் காலணிகள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஃபிட்ஃப்ளாப்பின் தயாரிப்புகள் அனைத்தும் அதன் பிராண்டின் தனிச்சிறப்பான பிரத்தியேக ‘ஆல் டே கம்ஃபர்ட் தொழில்நுட்பங்களான - மைக்ரோவாபில்போர்டு, சூப்பர்காம்ஃப், அனாட்டோமிகுஷ், அனாட்டோமிஃப்ளெக்ஸ், ஐகுஷன், டூவோகாம்ஃப், டைனமிகுஷ், நியோடைனமிக், வொண்டர்வெல்லி மற்றும் குஷ்எக்ஸ் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.
“தொடர்ந்து நடைபோடும் நபர்களுக்கான ஃபூட்வேர் என்பதைக் குறிக்கும் ‘ஃபார் தி பீப்புள் ஹூ மூவ்’ என்ற விளம்பரத்தின் மூலம் - தங்கள் அசாதாரண முயற்சிகளினால் உலகை முன்னோக்கி நகர்த்தி, எல்லைகளைக் கடந்து வெற்றி பெற்ற பிரபலங்களின் கதைகளை எடுத்துக் கூற விரும்புகிறோம்.
இந்த விளம்பரப் பிரச்சாரம் மக்களுக்கு உத்வேகம் தரவும், சவால்களை எதிர்த்து நிற்கவும், புதிய பாதைகளை உருவாக்கவும் ஊக்குவிக்குமென நாங்கள் நம்புகிறோம். ஃபிட்ஃப்ளாப்பின் காலணி ரகங்கள் அனைத்தும் முற்போக்கான ஃபேஷனாக இருக்கும்,” என்று மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் சீனியர் வைஸ் பிரசிடென்ட், தீபிகா தீப்தி தெரிவித்தார்.