தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒரு அங்கமான டிஜிட்ஆல் அமைப்பின் தலைமை நிர்வாகிகள் கூட்டம் டிஜிட் ஆல் லீடர்ஸ் காண்கிளேவ் 2023 என்ற பெயரில் மதுரையில் நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் 10 மாவட்டங்களில் இருந்து தலைமை நிர்வாகிகள், தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டிஜிட்ஆல் சங்கமம் 2023 வெற்றி மற்றும் அனுபவங்களை நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர். மேலும் அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் டிஜிட் ஆல் அமைப்பை வலுப்படுத்துவது, வணிகர்களின் தேவை அறித்து அவர்களுக்கு டிஜிட்டல் அறிவாற்றலை வழங்குவது, உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது குறித்து விவாதிக்கப் பட்டது. டிஜிட் ஆல் தலைவர் ஜே.கே.முத்து, தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும், முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கனவை நனவாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.