கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் இணையும் எச்சிஎல் டெக்

 


இந்தியாவில் நடைபெறவிருக்கும்  2023 ஐ‌சி‌சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான  விளையாட்டு கிட் ஐ கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டது. ஆடைஅணிகளுக்கான  கூட்டாளி  ஏஎஸ்ஐசிஎஸ் ஆல் இந்த சீருடை தயாரிக்கப்பட்டுள்ளது  மற்றும்  ஃபர்ஸ்ட நேஷனின் வடிவமைப்பை  இது காட்சிப்படுத்துகிறது மேலும்  ஆஸ்திரேலியாவின் அனைத்து பன்னாட்டு விளையாட்டு கிட்களிலும் இது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். க்ளோபல் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் இந்த விளையாட்டு கிட் இல்  சிஏ கூட்டாளியான, எச்சிஎல்  நிறுவனத்தின்  லோகோக்கள் சட்டைக் கைப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  

இந்த ஐசிசி நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வமான அணிக்கு ஆதரவாளராக முதன் முதலாக எச்சிஎல் டெக் பொறுப்பேற்றிருக்கிறது அத்துடன் இதன் பயிற்சி கிட்களிலும் இது இடம்பெறும்.  ஒரு டிஜிட்டல் பார்ட்னராக, எச்சிஎல் டெக் 2019 ஆண்டிலிருந்தே, கிரிக்கெட்.காம்.ஏயு, சிஏ லைவ் ஆப் மற்றும் ப்ளே கிரிக்கெட்  உட்பட  சமுதாய கிரிக்கெட் நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்கி ஒழுங்கமைத்து, சிஏ இன் டிஜிட்டல் சொத்துக்களை மாற்றியமைக்க உதவி  செயல்பட்டு வருகிறது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் எக்ஸிக்யூட்டிவ் ஜெனெரல் மேனேஜர், பிராட்காஸ்ட் அண்ட் கமர்ஷியல், ஸ்டீஃபானி பெல்ட்ரம் பேசுகையில், “எச்சிஎல் டெக் உடனான எங்கள் உறவை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறோம்.  ஆண்களுக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி என்பது விளையாட்டு நிகழ்ச்சிகளின்  நாட்காட்டி நிரலில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும் மற்றும் அதற்கு உலகளாவிய அளவில்  மிகப்பெரிய வீச்சு உள்ளது ஆகவே விளையாட்டு மைதானத்திலும் அதற்கு வெளியிலேயும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழுவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க நம்பகத்தன்மையோடு கூடிய ஒரு குளோபல் பிராண்டான எச்சிஎல் டெக்- ஐ கொண்டிருப்பதில்  நாங்கள்  பெரு மகிழ்ச்சி அடைகிறோம்”  என்றார்.

எச்சிஎல் டெக்-இன் சீஃப் மார்க்கெட்டிங் ஆபீசர், ஜில் கௌரி பேசுகையில், “கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடனான எங்கள் கூட்டாண்மையை மேலும் நீட்டித்திருப்பதிலும் ஆண்களுக்கான 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவளிப்பதிலும் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறோம். எச்சிஎல் டெக் பிராண்ட் உலகளாவிய விளையாட்டு சமூகத்தினுள்  நோக்கம் சார்ந்த கூட்டாண்மையோடு  ஒத்திசைந்து ஒரே பொருள் தருவதாக அமைந்துள்ளது. ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை, நாங்கள்  எச்சிஎல் டெக்- ஐ காட்சிப்படுத்தவும் கிரிக்கெட்டை ஒரு மாபெரும் விளையாட்டாகக் கொண்டாடி மகிழவுமான ஒரு வாய்ப்பாக பார்க்கிறோம்" என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form