ஸ்கோடாவின் புதிய மைல்கல் சாதனைக் கொண்டாட்டம்

 



வியட்நாம் சந்தையில் தடம் பதிப்பதன் மூலம், பன்னாட்டு மயமாக்கல் மூலோபாயத்தில் ஸ்கோடா ஆட்டோ முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. வியட்நாம், செக் அரசுப் பிரதிநிதிகள், ஸ்கோடா உள்ளூர் விநியோகஸ்தர் மற்றும் உற்பத்திக் கூட்டாளியான டிசி நிறுவனம் ஆகியோருடன் இணைந்து வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.   2025இல் 20 மற்றும் 2030இல் 30க்கும் அதிகமான கூட்டளிகளைக் கொண்ட விநியோக வலையமைவு மற்றும் ஆண்டு விற்பனை 40,000 அலகுகள் என ஸ்கோடா ஆட்டோ விரிவாக்கத் திட்டம் வகுத்துள்ளது.  கரோக் மற்றும் கோடியாக் உள்ளிட்ட முதல் மாடல்கள், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி ஆகும். உள்ளூர் சிகேடி உற்பத்தியை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்நாடு இந்தியாவுக்கு அருகிலிருப்பதைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்பைப் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நம்பிக்கையூட்டும் ஆசியன் பிராந்தியத்தின் நுழைவுவாயிலாக வியட்நாமை ஸ்கோடா இந்தியா பார்க்கிறது.  

குவாங்க்நின்ஹ் மாகாணத்திலுள்ள வியட் ஹங்க் தொழிற்துறைப் பூங்காவில் உள்ளூர் கூட்டாளியான டிசி குழுமத்துடன் இணைந்து தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சந்தைப் போக்குகளின் அடிப்படையில், 2027க்குப் பிறகு ஆண்டுதோறும் 27,000 வாகனங்களை ஒருங்கிணைக்கும் வகையில், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஹனாயிலுள்ள ஸ்கோடாவின் முதல் ஷோரூமில் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 25 முதல் கரோக் மற்றும் கோடியாக்-ஐ வாங்கலாம். வியட்நாம் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் கூடுதல் ஷோரூம்கள் விரைவில் திறக்கப்படும்.

வியட்நாம் வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப அதன் மாடல் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் மாடல்கள் நடுத்தரக் காலத்தில் வியட்நாமில் இறக்குமதி செய்யப்படும். கூடுதலாக, வியட்நாம் நுகர்வோர் இடையே, அதிகரித்து வரும் மின்சார வாகனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்,  மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் என்யாக் வாகனங்களும் அறிமுகமாகும். 2024 இரண்டாம் அரையாண்டு தொடங்கி ஸ்கோடா குறிப்பிடத்தக்கப் பிராந்திய ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும். முதல் குஷாக் வாகனங்கள் புனே தொழிற்சாலை சிகேடி தொகுப்புகளிலிருந்து ஒருங்கிணைப்பதற்காக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதைத் தொடர்ந்து 2025இல் ஸ்லேவியா ஏற்றுமதியாகும்.

ஸ்கோடா ஆட்டோ சிஇஓ க்ளாஸ் ஜெல்மெர் கூறுகையில் ‘வேகமாக வளர்ந்து வரும் சந்தையில், வியட்நாமின் ஆற்றல் மிக்க பொருளாதாரம் மற்றும் புதிய வாடிக்கையாளர் குழுவுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களது துரிதப்படுத்தும் சர்வதேசமயமாக்கல் உத்தியின் அடுத்த கட்டமாகும். இதன் மூலம் ஆசியான் பிராந்தியத்தில் எங்கள் பிராண்டை வலுப்படுத்துவதுடன், இந்தியா மற்றும் ஐரோப்பாவின் இரண்டு முக்கிய சந்தைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் தீவிரப்படுத்தம்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form