தொடர்ந்து 16 ஆண்டுகளாக உலகளவில் முக்கிய அப்ளையன்சஸ் பிராண்டான ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா, சென்னையில் உள்ள சத்யா ஏஜென்சிஸில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வில் அதன் எப்9 ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின் சீரிஸினை அறிமுகம் செய்து, வீட்டு உபயோக சாதன கண்டுபிடிப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரைவாக நகர்த்தியுள்ளது. நவீன இந்திய இல்லங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பிரீமியம் ரக சாதனம் இந்தியாவின் ஒரே ஏஐ கலர் பேனலைக் கொண்டுள்ளதாகும். ஒன் டச் சலவை தொழில்நுட்பத்துடன் வரும் இது, சலவை அனுபவத்தை மறுவரையறை செய்வதோடு மற்றும் நாட்டில் ஸ்மார்ட் வாஷிங் தீர்வுகளுக்கு ஒரு புதிய தரநிலையை அமைக்கிறது.
இந்த பண்டிகை காலம் உற்சாகமான கொண்டாட்டங்களையும் சிறப்பு தருணங்களையும் கொண்டு வருவதால், ஹையர் எப்9 வாஷிங் மெஷின் உங்கள் பண்டிகை புத்தாடைகள் எப்போதும் பிரகாசமாகவும், புதியதாகவும் இருப்பதை உறுதி செய்வதோடு, மென்மையான துணிகளை கவனமாகக் கையாளுகிறது. கொண்டாட்டங்களுக்கு அப்பால், இந்த ஸ்மார்ட் வாஷிங் மெஷின் ஒவ்வொரு சலவையின் அளவிற்கு ஏற்ப செட்டிங்ஸை தானாகவே நிர்ணயித்துக்கொள்வதன் மூலம் அன்றாட சலவை முறையை எளிதாக்குகிறது, இவை அனைத்தும் ஒரே தொடுதலில் (டச்சில்) நிகழ்கிறது. இதன் ஸ்டைலான வடிவமைப்பு நவீன இல்லங்களுக்கு சரியாக பொருந்துகிறது; அதே நேரத்தில் ஹாய் ஸ்மார்ட் செயலியானது பயனர்களுக்கு தொலைவிலிருந்து சலவை செயல்முறையை சௌகரியமாக கட்டுப்படுத்தும், கண்காணிக்கும் வசதியைத் அளிக்கிறது; மேலும், பிஸியான பண்டிகை காலத்திலும் அதற்கு பிறகும் உங்களது மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
இந்த அறிமுகம் குறித்து ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா நிறுவனத்தின் பிரசிடென்ட் என்.எஸ்.சதீஷ் கூறுகையில், “சென்னையில் உள்ள சத்யா ஏஜென்சிஸ் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எங்களது எப்9 வாஷிங் மெஷின் சீரிஸ் - தென்னிந்தியாவில் உள்ள நுகர்வோருடன் ஆழமான நம்பிக்கை மற்றும் வலுவான உறவினை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. ஒன் டச் வாஷிங் மெஷின் கொண்ட இந்தியாவின் ஒரேபேஐ கலர் பேனல் என்ற முறையில் - புதுமை மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட தயாரிப்புகளுக்கான ஹையரின் அர்ப்பணிப்பிற்கு இந்த எப்9 சீரிஸ் ஒரு உதாரணமாக இருக்கும். இது தினசரி வாழ்க்கையை எளிதாக்கும் அறிவார்ந்த மற்றும் திறமையான வாஷிங் தீர்வுகளை வழங்குகிறது. சத்யா ஏஜென்சிஸ் போன்ற நம்பகமான ரீடெயில் விற்பனையாளர்களுடன் இணைவதன் மூலம், நுகர்வோருக்கு இந்த மேம்பட்ட அம்சங்களை எங்களால் நேரடியாக காட்சிப்படுத்த முடிகிறது. இது ஃபிரன்ட்-லோடு வாஷிங் மெஷின் பிரிவில் புதிய தரநிலைகளை அமைக்கும் அதே நேரத்தில், ஆஃப்லைன் ஈடுபாட்டின் மதிப்பை மீண்டும் உறுதிபடுத்துகிறது, என்றார்.
நவீன இந்திய இல்லங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஹையர் எப்9 வாஷிங் மெஷின் சீரிஸ் - சிரமமற்ற சௌகரியம், நேர்த்தியான அழகியல் மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இந்த ரகத்தின் முக்கிய அம்சமாக இருப்பது அதன் செயற்கை நுண்ணறிவு அம்சமான ஏஐ ஒன் டச் தொழில்நுட்பமாகும். இது சரியான வாஷிங் சுழற்சியைத் தேர்வுசெய்கிறது; அதாவது துணிகளின் அளவு, துணி வகை மற்றும் அழுக்கின் அளவை புத்திசாலித்தனமாக கண்டறிகிறது, இது மின் தடைகளுக்குப் பிறகு தானாகவே மீண்டும் தொடங்கக்கூடியது. அமைதியான, சக்திவாய்ந்த டைரக்ட் மோஷன் மோட்டார், மற்றும் ஆழமாகவும், மென்மையாகவும் சலவை செய்வதற்காக கூடுதலாக பெரிய 525 மி.மீ. சூப்பர் டிரம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது; அதனால் எப்9 சீரிஸ் சிறந்த சலவைகள், மேலான துணி பராமரிப்பு மற்றும் மின்னாற்றல் சிக்கனத்தை அனாயசமாக வழங்குகிறது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹையரின் அதிநவீன தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஹையர் எப்9 ஃபிரன்ட் லோடு வாஷிங் மெஷின் 12 கிலோகிராம் திறனுடன் வருகிறது, இது 5 வருட முழுமையான வாரண்ட்டியுடனும், மோட்டாருக்கு 20 ஆண்டுகள் வாரண்ட்டியுடனும் வருகிறது. ரூ.59,990 என்கிற விலையில் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி ரீடெயில் விற்பனை நிலையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.