டிவிஎஸ் ஜூபிடர் 125 டூயல் டோன் வேரியண்ட் அறிமுகம்

 


உலகின் முன்னணி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் வெற்றிகரமான டிவிஎஸ் ஜூபிடர் இருசக்கர வாகனத்தின் வரிசையில் இப்போது மிகவும் மேம்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 125 டூயல் டோன் ஸ்மார்ட் எக்ஸோனெட் (எஸ்எக்ஸ்சி) ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

மேலும் அதிகம் என்று பொருள்படும் ’ஜயாடா’ முழக்கத்துடன்,மேலும் அதிக ஸ்டைல், மேலும் அதிக அம்சங்கள் மற்றும் மேலும் அதிக மதிப்பை வழங்கும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்கூட்டர், அனைத்து 125சிசி ஸ்கூட்டர்களிலேயே எல்லாமும் மேலும் அதிகம்’ என்ற பிராண்டின் “ஹார் 125சிசி ஸ்கூட்டர் சே ஜயாடா”வாக்குறுதியை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது.

கம்பீரமான, வலிமையான, கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும்  இப்பிரிவு வாகனங்களிலேயே முதல் முறையாக இடம்பெறும் புதிய அம்சங்களுடன், அறிமுகமாகி இருக்கும் டிவிஎஸ் ஜூபிடர் 125 டூயல் டோன்  எஸ்எக்ஸ்சி, அன்றாட பயணத்தில் தங்களது எதிர்பார்புகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வாகனம் வேண்டுமென எதிர்பார்க்கும் இன்றைய வாகன ஓட்டிகளுக்கு மிகப்பொருத்தமான தேர்வாக இருக்கும். சாலைகளில் வலம் வரும்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அசத்தலான இரண்டு டூயல்-டோன் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஐவரி பிரவுன் மற்றும் ஐவரி க்ரே என இந்த இரு டூயல் டோன் வண்ணங்களிலான  டிவிஎஸ் ஜூபிடர் 125 டூயல் டோன்  எஸ்எக்ஸ்சி பரபரப்பான இந்திய நகர்ப்புற இரு சக்கர வாகனப்ரியர்களின் பிரீமியம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு அபாரமான ஸ்கூட்டராக அமைந்திருப்பது குறிப்பிட்டத்தக்கது.

டிவிஎஸ் ஜூபிடர் 125 டூயல் டோன்  எஸ்எக்ஸ்சி அறிமுக நிகழ்வில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், பயணிகள் மற்றும் மின்சார வாகன வணிகப் பிரிவின் தலைமை நிர்வாகி மற்றும் கார்ப்பரேட் பிராண்ட் அண்ட் மீடியா பிரிவின் தலைமை நிர்வாகி அனிருத்தா ஹால்தார், "இன்றைய வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்கூட்டரை மட்டும் வாங்குவது இல்லை, மாறாக அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் வகையில் அதில் முதலீடு செய்கிறார்கள். டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, டிவிஎஸ் ஜூபிடர் 125-ஐ மேம்படுத்தும் வகையில் அசத்தலான அம்சங்களுடன் புதுப்பித்துஅறிமுகப்படுத்துவது என்பது அடுத்தகட்ட நகர்வாக இருக்க்கும். அந்த வகையில் டிவிஎஸ் ஜூபிடர் 125 டூயல் டோன்  எஸ்எக்ஸ்சி பரிணாம வளர்ச்சியின் நவீனத்துவத்தை பிரதிபலிக்கிறது" என்றார்.

இந்த ஸ்கூட்டரில் மனம் கவரும் இரண்டு வண்ணங்களின் கலவையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாடி பேனல்கள் கணகளைக் கவர்கின்றன. செளகரியமளிக்கும் வகையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் இருக்கை, சிக்னேச்சர் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் உறுதியான பயணத்திற்கான டைமண்ட்-கட் அலாய் அலாய் வீல்கள், பில்லியனர் பேக்ரெஸ்ட் அம்சம், இருக்கைக்கு அடியில் விசாலமாக இருக்கும் 33 லிட்டர் அளவிலான இடவசதி, முன் பக்கத்தில்  எளிதாக எரிபொருள் நிரப்பும் வசதி, 2 லிட்டர் அளவிலான முன்பக்க க்ளோவ் பாக்ஸ் வசதி, ரிவர்ஸ் எல்சிடி கிளஸ்டர், மிகப்பெரிய முன் பக்க மற்றும் பின் பக்க டயர்கள் ஆகிய அம்சங்கள் அருமையான பயண அனுபவத்தை அளிக்கின்றன. புதிய டிவிஎஸ் ஜூபிடர் 125 டூயல் டோன்  எஸ்எக்ஸ்சி இப்போது டிவிஎஸ் டீலர்ஷிப்களில் ரூ. 88,942/- (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்ற கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form