ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், இந்தியாவில் தனது 25 ஆண்டு பயணத்தை கொண்டாடுகிறது. இது உண்மையான வரலாற்றுச் சின்னமான, புதிய ஆக்டோவியா ஆர்எஸ் காரின் மீள்வருகையை குறிக்கிறது. முழுவதும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (எஃப்புயு) குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கும் ஆக்டோவியா ஆர்எஸ், சிறந்த ஓட்டும் அனுபவம், துணிச்சலான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான ஆர்எஸ் பாணியை வெளிப்படுத்துகிறது. இந்தியாவில் ரசிகர்களுக்காக ஒரு தனிப்பட்ட அடையாளமாக திரும்ப வருகிறது.
வெளியீட்டு விழாவில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் டைரக்டர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், “ஆக்டோவியா ஆர்எஸ்க்கு நாங்கள் பெற்ற ரெஸ்பான்ஸ் அற்புதமாக உள்ளது. இந்த ஐகானிக் மாடல் இந்திய ஓட்டுனர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி, உலகளாவிய ஆக்டோவியா ஆர்எஸ்-ன் புகழ்பெற்ற அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது. ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் 25 அற்புதமான ஆண்டுகளை கொண்டாடும் போது, உலக தரத்திற்குரிய கார்கள் வழங்கும் எங்கள் உறுதி முன்பு போலவே வலுவாக இருக்கிறது. ஆர்எஸ் பேட்ஜ் வெறும் செயல்திறனை மட்டுமல்ல, அதற்கு மேலும் ஒரு அடையாளத்தை காட்டுகிறது. இது எங்கள் வாடிக்கையாளர்கள் ஸ்கோடா பிராண்டுடன் கொண்ட உணர்ச்சி பிணைப்பு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ஸ்கோடா குடும்பத்தில் புதிய தலைமுறை ரசிகர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த சந்தையில் எங்கள் பிராண்டின் வலுவான மரபையும் ரசிகர்களின் ஆர்வத்தையும் தொடர்ந்தும் கட்டமைக்கிறோம், என்றார்.
ப்ரீ புக்கிங் மூலம் வெறும் 20 நிமிடங்களில் விற்பனையான ஸ்கோடா ஆக்டோவியா ஆர்எஸ் காரானது, இந்தியா உட்பட உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடும் தனது புகழை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. 195 கிலோவாட் (265 பிஎஸ்) பவர் மற்றும் 370 என்எம் டார்க் வழங்கும் 2.0 டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 0 டூ100 கி.மீ/மணி வேகத்தை வெறும் 6.4 நொடிகளில் அடைகிறது. மின்னணு முறையில் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ வேகம், 10 ஏர்பேக்குகள், அடாஸ், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி ஏரியா வியூ கேமராக்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. ரூ.49,99,00 என்கிற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் மாம்பா கிரீன், கெண்டி வைட், ரேஸ் ப்ளூ, மேஜிக் பிளாக், மற்றும் வெல்வெட் ரெட் ஆகிய 5 கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கான டெலிவரிகள் நவம்பர் 6 முதல் ஆரம்பமாகிறது, என்று ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிவித்துள்ளது.
