மொபைல் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமும், இந்தியாவின் மிகவும் நம்பகமான ஏஐ ஸ்மார்ட்போன் பிராண்டுமான மோட்டோரோலா, பிளிப்கார்ட்டின் பிக் பேங் தீபாவளி விற்பனை 2025-ஐ முன்னிட்டு பிரத்யேகமாக, பல்வேறு விலைக் குழுக்களில் அதன் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய பண்டிகைக்கால தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. #பிக் பேங்க் தீபாவளி சேல் -இன் ஒரு பகுதியாக, மோட்டோரோலா அதன் ஏஐ இல் புத்தம்புதிய மேம்பாடுகள், பாண்டோன் வடிவமைப்பு மற்றும் நீடித்துழைப்பு ஆகியவற்றை, மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு, இதற்குமுன் இல்லாத விலையில் கொண்டு வருகிறது. இந்த சாதனங்கள் விற்பனையில் கிடைக்கின்றன; மேலும், பிக் பேங் தீபாவளி விற்பனை முழுவதும் அனைத்து நுகர்வோருக்கும் கிடைக்கும்.
இந்த சீசனின் மிகப்பெரிய சலுகையுடன் தொடங்கி, ரூ.29,999க்கு விற்பனையாகும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (8+256ஜிபி மாடல்)-ஐ இப்போது ரூ.24,999* என்ற பண்டிகைக்கால பயனுறு விலையானது, இதை ரூ.25,000க்கு கீழ் மிகவும் சீர்குலைக்கும் முதன்மையான ஒன்றாக ஆக்குகிறது. இந்த போன் டிரிபிள் 50எம்பி கேமரா, ஏஐ ஸ்டெபிலைசேஷன், போட்டோ என்ஹான்சர் மற்றும் மேஜிக் எரேசர், அன்பிலர் 4500 நிட்ஸ் பிரகாசம், எச்டிஆர் 10 ப்ளஸ், மற்றும் கொரில்லா கிளாஸ், 7ஐ பாதுகாப்பு போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
அதேப்போல மோட்டோரோலா எட்ஜ் 60 புயூசன் ஆனது, ரூ.18,999* (8+256ஜிபி) மற்றும் ரூ.20,999* (12+256ஜிபி) விலையில் கிடைக்கும். இந்த போன், 1.5கே ட்ரூ கலர் குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளே, 4500 நிட்ஸ் உச்சப் பிரகாசம், கொரில்லா கிளாஸ் 7ஐ, மற்றும் 96.3% ஸ்கிரீன் - டு - பாடி விகிதம் ஆகியவற்றுடன் பண்டிகை உற்சாகத்ததை அதிகரிக்கிறது. மோட்டோ ஏஐ மற்றும் கூகுள் ஏஐ டூல்கள் ஆகியவற்றுடன் இப்பிரிவின் ஒரே ட்ரூ கலர் சோனி லைடியா 700சி கேமரா ஆனது, ஐபி68/ஐபி69 சர்ட்டிஃபிகேஷன் மற்றும் மில் 810எச் கிரேடு நீடித்துழைப்பு ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மோடோ ஜி 96 5ஜி போனுக்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் ஒரே 144 எச் இசட் 6.67இஞ்ச் போலெட் கர்வ்டு டிஸ்ப்ளே, 1600 நிட்ஸ் உச்சப் பிரகாசம் மற்றும் 10-பிட் டிசிஐ -பி3 கலர் சப்போர்ட் ஆகியவற்றுடன் இப்பண்டிகைக்கால போர்ட்ஃபோலியோவை மெருகூட்டுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2-ஆல் திறனூட்டப்படும், அனைத்து லென்ஸ்களிலும் 4கே வீடியோவை இயக்கவல்ல ஒரு 50 எம்பி ஐஓஎஸ் சோனி கேமராவானது, ஒரு மெலிதான மற்றும் இலகுரக வேகன் லெதர் வடிவமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் ரூ.14,999* (8+128ஜிபி) மற்றும் ரூ.16,999* (8+256ஜிபி) எனும் விலைகளில் கிடைக்கிறது.
மோடோ ஜி86 பவர் ஆனது, 4500 நிட்ஸ் உச்ச பிரகாசம், 120 எச்இசட் ரெஃப்ரெஷ் வீதம் மற்றும் எஸ்ஜிஎஸ் கண் பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும் ஒரு 6.67இஞ்ச் 1.5கே போலெட் ஃப்ளாட் டிஸ்ப்ளேவுடன், 33 வாட்ஸ் டர்போபவர் சார்ஜிங்குடன் இரண்டு நாட்களுக்கு மேல் பயன்பாட்டை வழங்கவல்ல, மோட்டோரோலாவின் இதற்குமுன்னல்லாத மிகப்பெரிய 6720 எம்ஏஎச் பேட்டரியுடன் இணைந்து, இப்பிரிவின் முன்னோடி உறுதித்தன்மையைக் கொண்டுவருகிறது. இந்த டிவைஸ் இப்போது ரூ.14,999* என்ற விலையில் கிடைக்கிறது.
ரூ.40,000 க்கு கீழான விலையில், இந்தியாவின் மிகச்சிறந்த ஃபிளிப் போனாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மோட்டோரோலா ரேசர் 60-ஆனது, உலகின் முதல் வீடியோ சைகை கட்டுப்பாட்டை ஒரு ஃபிளிப் வடிவமைப்பில் அறிமுகப்படுத்துகிறது. இது மோட்டோ ஏஐஆல் திறனூட்டப்படும் ஒரு பாண்டோன் - வேலிடேட்டேடு ட்ரூ கலர் கேமரா அமைப்பு, 500,000+ ஃபிளிப்களுக்கு பரிசோதிக்கப்பட்ட ஒரு டைட்டானியம்-உறுதிப்பாட்டுடனான ஹிஞ்ச், இப்பிரிவின் மிகப்பெரிய 3.6இஞ்ச் போலெட் வெளிப்புற டிஸ்ப்ளே, மற்றும் 3000 நிட்ஸ் உச்ச பிரகாசம், 120 சதவீதம் டிசிஐ - பி3 கலர் மற்றும் 120 எச்இசட் ரெஃப்ரெஷ் வீதத்துடன் கூடிய 6.9 இஞ்ச் கிரீஸ்லெஸ் எல்டிபிஓ மெயின் டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.39,999 எனும் சிறப்பு பண்டிகைக்கால விலையில் வழங்கப்படுகிறது, இதில் ஃப்ளாட் தள்ளுபடியாக ரூ.10,000 அடங்கும்.
ஸ்மார்ட்போன்களுக்கும் மேலாக, மோட்டோரோலாவின் பிரீமியம் இயர்பட்ஸ், க்யூஎல்இடி டிவிக்கள் மற்றும் மினி எல்இடிக்கள் ஆகியவை இரண்டாம் கட்ட பிக் பேங் தீபாவளி விற்பனையில் சிறப்பு பண்டிகைக்கால விலையில் கிடைக்கின்றன, என்று மோட்டோரோலா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.