கின்னஸ் உலக சாதனை பட்டம் வென்றது டிகன்ஸ்ட்ரக்ட்



சருமபராமரிப்பு நிறுவனமான டிகன்ஸ்ட்ரக்ட் ஸ்கின்கேர் நிறுவனம் 24 மணிநேர டெர்மாத்தான் மூலம், சரும பராமரிப்புக்கான மிக நீண்ட நேர லைவ் ஸ்ட்ரீம் என்ற புதிய கின்னஸ் உலக சாதனை பட்டத்தை அதிகாரப்பூர்வமாக முறியடித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த மாரத்தான் யுடியூப் நேரலை அமர்வில் 24 தோல் மருத்துவர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் 30,000 பங்கேற்பாளர்களை ஈர்த்த இந்த அமர்வு, 5,00,000க்கும் அதிகமான நேரடி கலந்துரையாடல்களை உருவாக்கியது. இதில் 2,00,000 சரும பராமரிப்பு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில்,10,000 கேள்விகளுக்கு நேரலையிலேயே பதிலளிக்கப்பட்டது. இது இந்திய சரும பராமரிப்பு துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

24 மணிநேர நேரலை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, இந்தச் சாதனை அதிகாரப்பூர்வமாக கின்னஸ் உலக சாதனை மூலம் அங்கீகரிக்கப்பட்டது.

நாடு முழுவதும் சருமபராமரிப்பு கல்வியைப் பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘டெர்மத்தான்’ நிகழ்வு, பெரிய நகரங்களிலிருந்து சிறிய ஊர்கள் வரை - இணைய இணைப்பு கொண்ட யாருக்கும் நிபுணர் வழிகாட்டலை அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டது. இந்த 24 மணிநேர அமர்வில், டாக்டர். அனுப்ரியா கோயல், டாக்டர். நேஹா சோலங்கி, டாக்டர். ஆதித்யா வாலிங்கர், டாக்டர். ராதிகா திரிவேதி, டாக்டர். தேவேந்திரா, டாக்டர். ராஷி சோனி, டாக்டர். விதேகிஉள்ளிட்ட பல முன்னணி தோல் மருத்துவர்கள் பங்கேற்றனர். இவர்கள் முகப்பரு, நிறமாறுதல், சூரிய கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பு, பொருட்களின் அடிப்படை அறிவு, தொடக்க நிலை சருமபராமரிப்பு வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கினர். பார்வையாளர்கள் யுடியூப் நேரலை உரையாடல் மூலம் நிபுணர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, தங்களின் உண்மையான சருமபராமரிப்பு அனுபவங்களை பகிர்ந்து ஆலோசனைகளை பெற்றனர்.

இந்தச் சாதனை குறித்துப் பேசிய டிகான்ஸ்ட்ரக்ட் ஸ்கின் கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மாலினி அடாபுரெட்டி, “டெர்மாத்தான், எங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கின்னஸ் உலக சாதனை பட்டத்தைபெற்றது மட்டுமின்றி, நாடு முழுவதும் நாங்கள் கண்டமுன்னெப்போதும் இல்லாத, பங்களிப்பும் இதற்குக் காரணம். சிக்கலான சரும பராமரிப்பு அறிவியலை எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், செயல்படுத்தக்கூடியதாகவும் மாற்றுவதில் தோல் மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றினர், நிபுணத்துவ அறிவுக்கும் அன்றாடக் கவலைகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்தனர். பெரிய அளவிலான, நிபுணர்களால் வழிநடத்தப்படும் முயற்சிகள் சருமபராமரிப்பில் நீண்ட கால நம்பிக்கையை உருவாக்க முடியும் என்ற எங்கள் நம்பிக்கையை இந்தக் கலந்துரையாடல்கள் வலுப்படுத்தின. மேலும், இந்தியாவில் சருமபராமரிப்பு மேம்படும் விதத்தில்அறிவியல் பூர்வமான வழிகாட்டலை மையமாக்குவதற்கான எங்கள் உறுதியையும் இது பலப்படுத்துகிறது,” என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form