என்.பி.சி.ஐ பிஹிம் சர்வீசஸ் லிமிடெட் உருவாக்கிய பிஹிம் பணப் பரிவர்த்தனை செயலி, 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது, இந்தியா முழுவதும் பயனர் ஏற்கும் தன்மை மற்றும் நம்பிக்கையை காட்டுகிறது. 2025 ஆம் ஆண்டில், பிஹிம் செயலியின் மாதாந்திர பரிவர்த்தனைகள் ஜனவரியில் 3.897 கோடியில் இருந்து செப்டம்பரில் 11.985 கோடியாக உயர்ந்துள்ளன, இது 9 மாதங்களில் மூன்று மடங்கு அதிகரிப்பாகும்.
மாதந்தோறும் சராசரி 12% வளர்ச்சி காணப்பட்டுள்ளது. மேலும், 2025 செப்டம்பர் மாதத்தில், பிஹிம் செயலி ரூ.16,803 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செயலாக்கியுள்ளது, இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனை எண்ணிக்கையில் 312% அதிகரிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பில் 94% வளர்ச்சியை காட்டுகிறது.
2025 மார்சில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பிஹிம் பணப்பரிவர்த்தனை செயலி, தமிழ் உட்பட 15க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. விளம்பரமில்லாததும், குழப்பமற்ற இடைமுகத்துடனும், குறைந்த இணைய இணைப்புள்ள பகுதிகளுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்பட்டதும் ஆகும். இது நகரம், கிராமம் மற்றும் நகரச்சார்புடைய பகுதிகள் அனைத்திலும் உள்ள பயனர்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது.
இதுபற்றி என்.பி.எஸ்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லலிதா நடராஜ் கூறுகையில், “இன்றைய துரிதமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை உலகத்தில், பிஹிம் செயலி பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. பாரதுக்காக உருவாக்கப்பட்ட இதன் முதன்மையான அம்சங்கள் - பாதுகாப்பு, வசதி மற்றும் உள்ளடக்கம் ஆகும். குறைந்த இணைய இணைப்புள்ள இடங்களிலும் சிறிய மதிப்புடைய பரிவர்த்தனைகளை சிறப்பாக மேற்கொண்டு, ரொக்கப் பொருத்தத்தை குறைக்கும் வகையில் இது செயல்படுகிறது. பயனர்களின் நம்பிக்கையை இந்த வலிமையான வளர்ச்சி காட்டுகிறது. தினசரி சிறிய பரிவர்த்தனைகளுக்காகவோ அல்லது யுபிஐ சர்கிள் போன்ற மேம்பட்ட அம்சங்களுக்கு வேண்டியோ, பிஹிம் செயலி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் மாற்றுகிறது” என்றார்,
செலவுகளைப் பகிர்வு செய்யும் வசதி, குடும்ப பயனர் பயன்முறை, செலவுகள் பகுப்பாய்வு, செயல்படுத்த வேண்டியவை, யுபிஐ சர்கிள் போன்ற பயனர்களுக்கான மேம்பட்ட அம்சங்கள் பிஹிம் பயன்பாட்டை அதிகரித்திருப்பதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.