ஸ்டீல் நிறுவனத்தின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பரிவர்தன் யாத்ரா, இயந்திரமயமாக்கப்பட்ட வேளாண்மை மூலம் இந்திய விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மகத்தான பயணம், ஹோட்டல் சீ வியூ, கன்னியாகுமரியில் ஒரு மாபெரும் விழாவுடன் நிறைவடைந்தது. ஸ்டீல் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களைக் கடந்து, விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஈடுபடுத்தி மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள் மற்றும் இயந்திரமயமான வேளாண்மையை முன்னோக்கி கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்தது.
இந்த யாத்திரை 2024 ஆகஸ்ட் 21 அன்று காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடங்கி, இந்தியாவின் முக்கிய வேளாண் மையங்களைக் கடந்து, கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. இது விவசாயிகளை மேம்படுத்தும் வகையில், உற்பத்தி மற்றும் நிலைத்தன்மையை உயர்த்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இந்த பயணத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டறைகள், செயல்முறைகள், நேரடி செயல் விளக்கங்கள் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பரிவர்த்தன் யாத்திரை நவீன விவசாய தொழில்நுட்பத்தின் திறனை எடுத்துக் காட்டியது மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தின் நடுவே உள்ள இடைவெளியை நீக்குவதன் மூலம் விவசாய சமூகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நிறைவு விழாவில் பேசிய ஸ்டீல் நிறுவன பிரதிநிதிகள் விற்பனை இயக்குநர், ராகவேந்திர பி.எம், வர்த்தக சந்தைப்படுத்தல் மேலாளர் பிரதுமன் சதுர்வேதி மற்றும் தென் பிராந்திய தலைவர் சஞ்சய் வர்மா, "இந்த பயணத்தின் மூலம் நவீன உபகரணங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் ஒத்துழைப்பு மற்றும் கற்றல் மனப்பாங்கையும் ஏற்படுத்தியுள்ளோம். பரிவர்த்தன் யாத்திரை போன்ற முயற்சிகள் இந்திய வேளாண்மையை மாற்றுவதற்கு முக்கியமான ஒன்றாகும். விவசாயிகளுக்கு அறிவு மற்றும் நவீன கருவிகள் கற்றலை வழங்குவதன் மூலம், தன்னிறைவு மற்றும் வளமான விவசாய சமூகத்தை உருவாக்குகிறோம்” என்றார்.